நாமக்கல்,
நாமக்கல் அருகே சுற்றுசூழலை மாசுபடுத்தும் பிளாஸ்டிக் தொழிற்சாலைக்கு அனுமதி வழங்கக்கூடாது என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு அளித்தனர்.

இதுதொடர்பாக நாமக்கல் மாவட்டம், லத்துவாடி அருகே மேல் ஈச்சவாரி பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அளித்த மனு தெரிவித்துள்ளதாவது: நாமக்கல் அருகே மேல் ஈச்சவாரியில் பிளாஸ்டிக் கழிவுகளை கொண்டு பொருட்களை தயாரிக்கும் ஆலை அமைக்க கட்டிட பணிகள் நடந்து வருகிறது. இப்பகுதியில் பிரதான தொழிலாக விவசாயம் மற்றும் ஆடு, மாடுகள் வளர்ப்பு இருந்து வருகிறது. இந்த நிலையில பிளாஸ்டிக் கழிவுகளை மறு சுழற்சி செய்து பொருட்கள் தயாரிக்கும் ஆலை அமைந்தால் சுற்றுப்புறசூழல் பாதிப்பதுடன் காற்று
மற்றும் குடிநீர் மாசு அடையும் வகையில் அதிகப்படியான நச்சு புகைவெளியாகும். ரசாயன பொருட்களை கொண்டு பிளாஸ்டிக் உற்பத்தி செய்யப்படும்போது, நிலத்தடி நீர் மாசு அடையும்.இதனால் எங்கள் கிராம பகுதியில் விவசாயம் குடிநீர் ஆதாரங்கள் பாதிக்கப்படுவதுடன், பொதுமக்களுக்கு சுவாச சம்பந்தமான நோய்களும் ஏற்படும். எனவே, சுற்றுப்புறச்சூழல் மற்றும் குடிநீர் ஆதாரங்களை பாதிக்கும் பிளாஸ்டிக் ஆலை எங்கள் ஊரில் துவங்குவதை தடை செய்ய தாங்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறுஅந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.