திண்டுக்கல்,
பழனி அருகே லாரி மீது ஆம்னி வேன் மோதி விபத்துக்குள்ளானதில் 7 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே சித்தலவாடம்பட்டியில் நள்ளிரவில் லாரி மீது ஆம்னி வேன் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் வேனில் பயணம் செய்த 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். உயிரிழந்த அனைவரும் கேரள மாநிலத்தை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விபத்தில் மேலும் 3 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். காயம் அடைந்தவர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் விபத்துக்கான காரணம் குறித்து காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.