நீட் தேர்வில் கேட்கப்பட்ட வினாத்தாள்களில் 49 கேள்விகள் தவறாக இருப்பதால் தவறான கேள்விகளுக்கு கருணை மதிப்பெண் வழங்கிட வேண்டுமென்று ராம் பிரகாஷ் வலியுறுத்தியுள்ளார்.

கடந்த வாரம் 6ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமையன்று நாடுமுழுவதும் பல்வேறு பிரச்சனை சர்ச்சைகளுக்கு மத்தியில் மருத்துவப்படிப்பாகன 2018 நுழைவுத்தேர்வான நீட் தேர்வு நடைபெற்றது. நடைபெற்ற நீட் தேர்வில் கேட்கப்பட்ட 180 கேள்விகளில் 49 கேள்விகள் தவறானது என்று தொழில் நுட்ப வல்லுனர் (TECK FOR ALL) ராம் பிரகாஷ் குற்றஞ்சாட்டியுள்ளார்.

மேலும் அவர் தவறான வினாவை குறிப்பிட்டு கூறுகையில்: உதாரணத்திற்கு இயற்பியல் பிரிவில் வினா எண் 136ல் “ஒற்றை அணு” என்று தவறான வார்த்தையாக உள்ளது. ஆனால் “ஓர் அணு” என்பதே சரியான வார்த்தை என்றும் இயற்பியலில் மட்டும் இதுபோன்ற 10 வார்த்தைகள் தவறாக உள்ளது என்றும், அதேபோல் உயிரியல் பிரிவில் வினா எண் 47ல் “காடழித்தால்” என்ற தவறான வார்த்தை உள்ளது அதற்கு சரியான வார்த்தை “காடுகளை  அழித்தல் ” என்பதாகும். இதில் அதிகப்படியான வார்த்தைகள் தவறாக உள்ளது என்கிறார். மேலும் வேதியல் பிரிவில் தவறான வார்த்தை உள்ளது என்று ஆதாரத்துடன் அவர் கூறியுள்ளார் .

Qp errors

Neet2018TamilQP-Code-LL

வினாத்தாளில் கேள்விகள் தவறாக இருப்பதால் பல மாணவர்கள் தேர்வின் போது குழப்பம் அடைந்ததாகவும் அவர் தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில் சி.பி.எஸ்.சி-யின் தவறான வினாத்தாள்களால் மாணவர்கள் மதிப்பெண் பாதிக்கப்படக்கூடாது. எனவே தவறாக கேட்கப்பட்ட 49 வினாக்களுக்கு 4 மதிப்பெண்கள் வீதம் 196 மதிப்பெண்கள் கருணையின் அடைப்படையில் வழங்கிட வேண்டும் என்றும், இந்த தவறு தொடர்ந்து நடைபெறாமல் இருப்பதற்கு என்.சி.ஆர் புத்தகத்தை தமிழ்மொழியில் கொண்டு வரவேண்டும் இதன் மூலம் தமிழ்வழிக் கல்வி மாணவர்கள் வினாக்களை எளிதாக புரிந்துகொண்டு தேர்வு எழுதமுடியும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

 

Leave a Reply

You must be logged in to post a comment.