அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் தருமபுரி மாவட்ட 3 வது மாநாடு மே 8, 9 ஆகிய தேதிகளில் அரூரில் நடைபெற்றது. இந்த மாநாட்டையொட்டி நடைபெற்ற பொதுக்கூட்டத்துக்கு மாவட்டத் தலைவர் சோ. அர்ச்சுணன் தலைமை வகித்தார். வரவேற்புக்குழுச் செயலாளர் இ.கே. முருகன் வரவேற்றார். சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் கே.பாலபாரதி, மாவட்டச் செயலாளர் ஏ.குமார், விவசாய தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் எம். முத்து, வரவேற்புக் குழுத் தலைவர் எம்.வீரபத்திரன், நிர்வாகிகள் ஆர். மல்லிகா, கே.தங்கராசு ஆகியோர் பேசினர். முன்னதாக துவங்கிய ஊர்வலத்தை தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் எம். ஆறுமுகம் துவக்கி வைத்தார். ஒன்றியச்செயலாளர் வி. ஆறுமுகம் நன்றி கூறினார்.

பொதுக்கூட்டத்தில் கே.பாலபாரதி பேசுகையில், “கடந்த 20 ஆண்டுகளாக மழை இல்லை. கிராமங்கள் வறட்சியை நோக்கி சொல்கிறது. மழை மதத்தை பார்ப்பதில்லை. இது இயற்கையின் குணம். மழையின் தன்மை பாரத பிரதமர் மோடிக்கு தெரிய வேண்டும். நீங்கள்இந்துவாக இருந்தால் பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டும் என்று சொல்கிறார். இப்படி மதம் பார்த்து மழை பெய்தால் என்னவாகும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு ஒரு மழை அளவும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஒரு மழையும் பொழிவதில்லை. இயற்கை மதம் பார்ப்பதில்லை. இயற்கைக்கு பொது குணம் உண்டு. இந்த பொதுமை மத்திய-மாநில ஆட்சியாளர்களுக்கு வரவேண்டும்” என்றார்.

மாகாத்தமா காந்தி வேலை உறுதித் திட்டம் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் கொண்டுவரப் பட்டு வேலை வழங்கப்பட்டு வருகிறது. குளம் , கண்மாய், வாய்கால் ஏரி ஆகியவற்றில் நீர்நிலை களை பாதுகாக்கவே மனித உழைப்பைக் கொண்டு செயல்பட வேண்டும் என்று இந்த வேலை திட்டம் உருவாக்கப்பட்டது. மத்திய அரசுஉரிய நிதி ஒதுக்காமல் முடக்கநினைக்கிறது. தருமபுரி மாவட்டத்தில் ஊரகவேலை உறுதித் திட்டத்தில் எந்த பஞ்சாயத்துக்களிலும் தற்போது வேலை வழங்குவதில்லை. வேலை வழங்கவில்லை என்றால் பஞ்சாயத்து அளவில் மாவட்டம் முழுவதும் தொடர் போராட்டம் நடைபெறும் என்று பாலபாரதி எச்சரித்தார். பிரதிநிதிகள் மாநாடு அரூரில் நடந்த பிரதிநிதிகள் மாநாட்டிற்கு மாவட்டத் தலைவர் சோ.அர்ச்சுணன், கே.எல்லப்பன், இந்தராணி ஆகியோர் தலைமை வகித்தனர். மாவட்ட துணைத் தலைவர் தீ.மாரியப்பன் அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். மாநில துணைத் தலைவர் ஜி.கணபதி துவக்கி வைத்தார். மாவட்டச் செயலாளர் எம். முத்து வேலை அறிக்கை வாசித்தார். விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் எம். ஆறுமுகம், மாதர் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.கிரைஸாமேரி, வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் ஆர்.எழில் அரசு ஆகியோர் வாழ்த்திப் பேசினர். மாநிலச் செயலாளர் வீ. அமிர்தலிங்கம் நிறைவுறையாற்றினார்.

ஒன்றியத் தலைவர் எம்.தங்கராசு நன்றி கூறினார்.நிர்வாகிகள் மாவட்டத் தலைவராக சோ. அர்ச்சுணன், செயலாளராக எம். முத்து, பொருளாளராக இ.கே. முருகன், துணைத் தலைவர்களாக கே. எல்லப்பன், வி.ஆறுமுகம், துணைச் செயலாளர்களாக சி.ராஜா, ரஜினி (எ) முருகன் தேர்வுசெய்யப்பட்டனர். தருமபுரி மாவட்டத்தை வறட்சிமாவட்டமாக அறிவித்து நிவாரணம்வழங்க வேண்டும். நிலமற்ற விவசாயதொழிலாளர் களுக்கு நிலம் வழங்க வேண்டும். மாவட்டத்தில் நிலவி வரும் குடிநீர் பிரச்சனையை தீர்க்க வேண்டும். ஆறு, ஏரி,குளம்,குட்டைகளை தூர்வாரி நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டும். அனைத்து கிராமங்களுக்கும் ஒகேனக்கல் குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். வீட்டுமனை கோரி விண்ணப்பித்தவர்களுக்கு மனைப்பட்டா வழங்க வேண்டும். வேளாண் சார்ந்த தொழிற்பேட்டை அமைக்கவேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Leave A Reply

%d bloggers like this: