திருப்பத்தூர்,
வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் குறவன் இன மக்கள் சாதிச் சான்று கோரி விண்ணப்பித்துள்ளனர். அந்த மனுக்களை எவ்விதக் காரணமும் இல்லாமல் வட்டாட்சியர் நிராகரித்துள்ளார். இதுகுறித்து முறையிட்டும் பலனில்லை.

இது ஒருபுறம் இருக்க, சாதி சான்று கோரி கணினி மையங்களில் விண்ணப்பிக்கச் சென்றால் “குறவன் (எஸ்.சி) சாதிச் சான்று கோரி வரும் விண்ணப்பங்களை வாங்கக் கூடாது” என வட்டாட்சியர் வாய் மொழியாக உத்தரவிட்டிருப்பதாகக் கூறி விண்ணப்பங்களை வாங்குவதற்குக் கூட மறுத்து வருகின்றனர். ஆகவே, எவ்வித காரணமும் தெரி விக்காமல் நிராகரித்த மனுக்களை ஏற்று சாதிச் சான்று வழங்க வேண்டும், புதிதாக வரும் விண்ணப்பங்களை மறுக்காமல் ஏற்று சாதிச்சான்று வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி மூன்று முறை வட்டாட்சியரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியும் சாதிச்சான்று வழங்க மறுத்து வருவதால் மே 8 செவ்வாயன்று வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தமிழ்நாடு குறவன் பழங்குடி மக்கள் முன்னேற்ற சங்கத்தின் தலைமையில் குறவன் இன மக்கள் போராட்டம் நடத்தினர். ஆனாலும் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை.

இதனையடுத்து, குழந்தைகளும் பெண்களும் வட்டாட்சியர் அலு வலகத்திலேயே அடுப்பு மூட்டி சமைத்தனர். இரவு முழுவதும் அந்த அலுவலகத்திலேயே காத்திருந்தனர். மறுநாள் (மே 9) காலையில் அனை வரையும் கைது செய்த காவல்துறையினர் தனியாருக்கு சொந்த மான இரண்டு மண்டபங்களில் தனித்தனியாக அடைத்தனர்.  திருமண மண்டபத்தில் அடைத்து துன்புறுத்தினாலும் எங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் வரைக்கும் உணவு உண்ணமாட்டோம் என்று புதனன்று காலை முதல் உணவு உண்ணாமல் 100 குழந்தை கள் உட்பட 250 பேர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதில் சிலர் மயக்க மடைந்ததால் அவர்களை வலுக்கட்டாயமாக தூக்கிச் சென்று 108 ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்றிச் சென்று குளுக்கோஸ் ஏற்றி வருகிறார்கள். இதனால் அந்த பகுதியில் பதற்றம் அதிகரித்திருக்கிறது.

Leave A Reply

%d bloggers like this: