கவுகாத்தி:
ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் சேருமாறு, பாஜக மாவட்டச் செயலாளர் ஒருவரே அசாமில் விளம்பரம் கொடுத்து இருப்பது அம்பலமாகி இருக்கிறது.முஸ்லிம்களுக்கு எதிராக இந்துக்களையும், காவல்துறையையும் திருப்பிவிடவும், கலவரத்தை ஏற்படுத்த வேண்டுமென்ற நோக்கிலும் அவர் இவ்வாறு செய்திருப்பதும் தெரிய வந்துள்ளது.
கவுகாத்தி அருகே இருக்கும் நல்பாரி என்ற இடத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.அங்கு இருக்கும் நிறைய கட்டடங்களில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் கொடிகளும், போஸ்டர்களும் ஒட்டப்பட்டு, ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் சேருங்கள் என்று விளம்பரம் செய்யப்பட்டு இருந்துள்ளது. காவல்துறையினரும் வழக்கம்போல, முஸ்லிம்கள் மீது சந்தேகம் கொண்டு, அவர்களை விசாரிக்க முடிவு செய்துள்ளனர். 

ஆனால், தீவிர விசாரணையின் முடிவில், போஸ்டர் ஓடியவர்களை நேரில் பார்த்தவர்கள் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் 6 பேரை கைது செய்த போலீசார், இதில் சதி இருப்பதையும், இந்த திட்டத்தை முன்னின்று நடத்தியது, பாஜக மாவட்டச் செயலாளரான தபான் பர்மான்-தான் என்பதையும் கண்டறிந்துள்ளனர்.இதையடுத்து தபான் பர்மானை கைது செய்த போலீசார், சறுஜோதி பாய்ஜா என்பவர் உள்ளிட்ட மேலும் 5 பாஜக-வினரையும் கைது செய்துள்ளனர். இவர்கள் தாங்கள் போஸ்டர் ஒட்டியதை ஒப்புக்கொண்டு உள்ளனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.