தாராபுரம்,
தாராபுரம் உழவர் சந்தையில் நிலவும் நிர்வாக சீர்கேட்டை கண்டித்துவிவசாயிகள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தாராபுரம் உழவர் சந்தை அண்ணா நகரில் கடந்த 2000-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இங்கு மூலனூர், குண்டடம், தாராபுரம் பகுதியிலிருந்து சுமார் 250 க்கும் மேற்பட்ட விவசாயிகள் காய்கறிகள், கீரை வகைகள் விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். ஆயிரத்திற்கும்மேற்பட்ட வியாபாரிகள், பொதுமக்கள் காய்கறிகளை வாங்கி செல்கின்றனர்.இந்நிலையில், உழவர் சந்தையில் நிர்வாக அதிகாரியாகதற்போது பணிபுரியும் வெங்டேசன் மாதத்திற்கு இரண்டு நாட்கள் மட்டுமே பணிக்கு வருவதால் அன்றாட பணிகள் ஸ்தம்பிக்கிறது. மேலும் விவசாயிகளின் குறைகள் உடனுக்குடன் தீர்க்கப்படுவதில்லை. குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் உழவர் சந்தையில் இல்லை. மேலும், சந்தையில் உள்ள சுற்றுச் சுவர் இடிந்து 2 ஆண்டுகளாகிறது. அதை சீர்படுத்ததால் விவசாயிகள் கொண்டுவரும் காய்கறிகளுக்கு பாதுகாப்பற்ற நிலையில் உள்ளது இதை உடனடியாக சரிசெய்யவேண்டும் என வலியுறுத்தி உழவர் சந்தை நுழைவாயிலில் செவ்வாயன்று காலை விவசாயிகள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் வழக்கம் போல் காய்கறிகளை வாங்க வந்த பொதுமக்கள் காய்கறிகளை வாங்க இயலாமல் காத்திருந்தனர். இதுகுறித்து, தகவல் அறிந்து தாராபுரம் வட்டாட்சியர் சிவக்குமார், காவல் உதவி ஆய்வாளர் தனபாலன், உழவர் சந்தை வேளாண்மை அலுவலர் மணிவேல் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இந்த பேச்சுவார்த்தையில், அடிப்படை வசதிகள் மேம்படுத்த உயர் அதிகாரிகளுடன் கலந்து பேசி நடவடிக்கை எடுக்கப்படும், நிர்வாக அலுவலர் சரியாக பணிக்கு வரதாது குறித்து துறை ரீதியான விசாரணை மற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதியளிக்கப்பட்டது. இதை ஏற்று விவசாயிகள் முற்றுகை போராட்டத்தை கைவிட்டனர்.அதன் பிறகு காய்கறி விற்பனை நடைபெற்றது. பொதுமக்களும் வாங்கி சென்றனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.