நாமக்கல்,
நாமக்கல்லில் அரசு அலுவலங்களில் காலாவதியான பழைய வாகனங்கள் துருப்பிடித்து வீணாகி வருவதால் அவற்றை ஏலம் விடவேண்டும் என்று பொது மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு துறை சார்ந்த அரசு அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த அலுவலங்களில் தேவைகாக பல்வேறு வாகனங்கள் வாங்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு பல ஆண்டுகள் பயன்படுத்தப்பட்ட பின்னர் காலவதியான பழைய வாகனங்களை உடனுக்கு உடன் ஏலம் விட்டால் பொதுமக்கள் ஆர்வமுடன் இந்த வாகனங்களை வாங்கிகொள்வர். இதன் மூலம் அரசுக்கும் வருவாய் கிடைக்கும். ஆனால் அவ்வாறு ஏலம் விடாமல் அரசு சம்பந்தப்பட்ட அரசு அலுவலங்களில் அப்படியே நிறுத்தி வைத்து இருப்பதால் அந்த வாகனங்கள் மழை மற்றும் வெயிலில் துருப்பிடித்து வீணாகி விடுகிறது.

பின்னர் காலதாமதமாக இந்த வாகனங்களை ஏலம் விடும்போது அந்த வாகனங்களை வாங்க பொதுமக்கள் ஆர்வம் காட்டுவதில்லை, இதனால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. குறிப்பாக நாமக்கல் யூனியன்ஆபீஸ் பின்புறம் பல ஆண்டுகளுக்கு முன் பயன்படுத்தப்பட்டு காலாவதியான வாகனம் ஒன்று உரிய காலத்தில் ஏலம் விடாமல் மழையில் நனைந்து வெயிலில் காய்ந்து துருப்பிடித்து மிகவும் சேதம் அடைந்துள்ளது. இதுபோன்று, நாமக்கல்லில் பல அரசு அலுவலகங்களில் ஏராளமான காலாவதியான வாகனங்கள் ஏலம் விடாமல் மழையில் நனைந்து துருப்பிடித்த நிலையில் உள்ளது. இவற்றை விரைந்து ஏலம் விட கோரிக்கை எழுந்துள்ளது.

இது குறித்து சமூக ஆர்வலர் குமார் கூறும்போது: நாமக்கல்லில் பல்வேறு அரசு அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது. இவற்றில் பயன் பயன்படுத்தும் வாகனம் அனைத்தும் அரசின் பணத்தினை கொண்டுதான் வாங்கப்படுகிறது. வாகனம் பழுதானால் வேறுவாகனம் வாங்கும் அரசு அதிகாரிகள் பழைய வாகனத்தினைஅரசு அலுவலகம் அருகே நிறுத்திவைத்து விடுகின்றனர். புதிய வாகனம் வாங்கும் போது பழைய வாகனத்தினை ஏலம் விட்டு விற்று அதில் வரும் பணத்தினை அரசு வருவாய் கணக்கில் சேர்ப்பது வழக்கம்.ஆனால் தற்பொழுது இதனை நடைமுறை படுத்தாமல் அரசு அதிகாரிகள் மெத்தன போக்காக செயல்படுகின்றனர்.

எனவே, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து அலுவலகம் அருகேயும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பழைய வாகனம் அனைத்தும் முறையாக ஏலம் விட வேண்டும். அரசு தலையிட்டு இதனை சரி செய்ய வேண்டும். காலவதியான வாகனங்களை விரைந்து ஏலம் விட்டால் அவற்றை பொதுமக்கள் வாங்கி பயன்பெருவதுடன் அரசுக்கும் வருவாய் கிடைக்கும் என்றார்.

(ந,நி)

Leave A Reply

%d bloggers like this: