ஈரோடு,
சிஐடியுவின் நிறுவனத் தலைவர் தோழர் வி.பி.சிந்தனின் நினைவு நாளை முன்னிட்டு ரத்ததான முகாம் நடைபெற்றது.

ஈரோடு தலைமை அரசு மருத்துவமனை வளாகத்தில் செவ்வாயன்று நடைபெற்ற இந்த ரத்ததான முகாமிற்கு சிஐடியு மாவட்ட துணைத்தலைவர் பி.சுந்தரராஜன் தலைமை வகித்தார். தமிழ்நாடு மருந்து மற்றும் விற்பனை பிரதிநிதிகள் சங்க மாவட்ட தலைவர் சுரேஷ்பாபு வரவேற்றார். ஈரோடு மருத்துவமனை கண்காணிப்பாளர் சாபிரா பேகம் ரத்ததான முகாமை துவக்கி வைத்தார். ஈரோடு நலப்பணிகள் இணை இயக்குனர் டி.கனகாசலகுமார், ரத்த வங்கியின் மருத்துவர் ஜி.சசிகலா, சிஐடியு மாவட்ட தலைவர் ஆர்.ரகுராமன், துணைப் பொதுச்செயலாளர் பொன்.பாரதி, சுமைப்பணியாளர்கள் சங்க மாவட்ட செயலாளர் அர்த்தனாரி உட்பட பலர் பங்கேற்றனர். இதில் திரளானோர்கள் பங்கேற்று ரத்தம் வழங்கினர்.

சேலம்
இதேபோல், சேலம் விபிசி நினைவகத்தில் செவ்வாயன்று சிஐடியு சேலம் மாவட்ட தலைவர் பொ.பன்னீர்செல்வம் தலைமையில் தோழர் வி.பி.சிந்தன் நினைவு தின சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் சிஐடியு மாவட்ட செயலாளர் டி.உதயகுமார், மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.கே.தியாகராஜன் ஆகியோர் கருத்துரையாற்றினர். இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

%d bloggers like this: