சேலம்,
மிகவும் அருவறுக்கத்தக்க வகையில் திரைப்படத்தை எடுத்த இயக்குநர் மற்றும் தணிக்கை அலுவலர்களுக்கு டிஷ்சு பேப்பர் அனுப்பி சேலத்தில் வாலிபர் சங்கத்தினர் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சமீபத்தில் வெளியான தமிழ் திரைப்படம் ஒன்றில் மிகவும் அருவறுக்கதக்க வகையிலான வசனங்கள் மற்றும் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, இத்திரைப்படம் முழுவதும் பெண்கள் மற்றும் இளைஞர்களை இழிவுபடுத்தும் வகையில் சித்தரிக்கப்பட்டுள்ளது. இத்தகைய மோசமான திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் மற்றும் தணிக்கை செய்த தணிக்கை வாரியத்திற்கு கண்டனம் தெரிவிக்கிற வகையில் சேலத்தில் வாலிபர் சங்கத்தினர் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்படி சேலம் பழைய பேருந்து நிலையம் அருகிலுள்ள தலைமை தபால் நிலையத்தில் இருந்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் செவ்வாயன்று படத்தின் இயக்குநர் மற்றும் தணிக்கை வாரியத்திற்கு டிஷீ பேப்பர் பார்சல் அனுப்பும்போராட்டத்தை மேற்கொண்டனர். இந்த நூதன போராட்டத்தில் சங்கத்தின் மாவட்ட செயலாளர் என்.பிரவின்குமார், மாவட்ட பொருளாளர் வெங்கடேஷ், மாநகர வடக்கு நிர்வாகிகள் சசி, கற்பகம் உள்ளிட்டு ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

%d bloggers like this: