விஜயவாடா:
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்கு இயந்திரத்தில் குளறுபடி செய்து குறுக்கு வழியில் வெற்றி பெற பாஜக முயற்சி செய்து வருவதாக தெலுங்கு நடிகர் சிவாஜி குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து, விஜயவாடாவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக பாஜக குறுக்கு வழியை தேர்ந்தெடுத்துள்ளதாகவும், இதற்காக, இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த ஒருவரின் உதவியுடன், வாக்கு இயந்திரத்தில் குளறுபடி செய்து, தேர்தலில் வெற்றி பெற பாஜக திட்டம் வகுத்துள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த சதிச்செயலை முறியடிக்க மற்ற அனைத்து கட்சியினரும் மிகவும் தீவிரமாக போராட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ள நடிகர் சிவாஜி, ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக் கோரி மே 10-ஆம் தேதி ஒரு நாள் உண்ணாவிரதம் இருக்கப்போவதாகவும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

You must be logged in to post a comment.