நாமக்கல்,
நாமக்கல் அருகே மணல் திருட்டை தடுக்கக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு அளித்தனர்.

நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் செவ்வாயன்று மாவட்ட ஆட்சியர் ஆசியா மரியத்திடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:- பரமத்தி வேலூர் அருகே காவிரி ஆற்றில் அனுமதியின்றி பலர் மணலை எடுத்து விற்பனை செய்து வருகிறனர். குறிப்பாக, எங்கள் பகுதி மக்களுக்கு காவிரி கரையோரம் மயானம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த மயானத்திற்கு செல்ல முடியாதபடி பாதை அமைத்து மணல் கொள்ளை நடந்து வருகிறது.

மேலும், மயானத்தில் உள்ள சமாதிகளை மணல் எடுக்கும் கும்பல் இடித்து சேதப்படுத்தி வருகின்றனர். இதுகுறித்து கேட்டால் மிரட்டல் விடுக்கின்றனர். எனவே எங்கள் பகுதியில் அனுமதியின்றி மணல் எடுக்கும் நபர்கள் மீது தாங்கள் கடும் நடவடிக்கை எடுத்து மணல் திருட்டை தடுக்க வேண்டும். இவ்வாறு அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

%d bloggers like this: