மன்னார்குடி மே 8

பால் கொள்முதல் செய்யும் இடத்திலேயே சத்துக்கள் அளைவையும் குறித்துக்கொடுக்க  வேண்டும். தீவனங்கள்  விலை 50 சதம் உயர்ந்துள்ள நிலையில் பசும்பால்  கொள்முதல் விலையை  லிட்டருக்கு ரூ.35-இம் எருமை பால் லிட்டருக்கு ரூ.45ம் என உயர்த்தி வழங்கிட வேண்டும் கால்நடைத் தீவனங்களை 60 சத மானிய விலையில் அரசு வழங்கிடவேண்டும். குழந்தைகள் சத்துணவுத் திட்டத்தில் ஆவின்பாலை’யும் சேர்த்து வழங்கிட வேண்டும் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் விரும்பியபடி தினம் 50 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யும் கட்டுமானத்தை உருவாக்கிட வேண்டும் பால் பண பாக்கிகளை முழுமையாக வழங்கிட வேண்டும் கறவை மாட்டுகடன் வழங்கிட புதிதாக மனு பெற்றுள்ளவர்கள் அனைவருக்கும் கடவைமாட்டு கடன் வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் சார்பாக மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்நடைபெற்றது.

இதன் ஒரு பகுதியாக திருவாரூர் மாவட்டக்குழுவின் சார்பாக மன்னார்குடியில்  வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு செவ்வாய்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநில துணைத் தலைவர் பி. ரெத்தினம் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ஜி.ரெகுபதி, மாவட்ட  பொருளாளர் என். இளங்கோவன் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் வி.எஸ். கலியபெருமாள், மாவட்ட தலைவர் எஸ்.தம்புசாமி, மாவட்ட பொருளாளர் எஸ். சாமிநாதன், திமுக வைச் சார்ந்த கலைவாணி, உள்ளிட்டோர் உரையாற்றினார்கள். முடிவில் தமிழ்நாடு  பால் உற்பத்தியாளர் சங்க மாநில பொதுச் செயலாளர் கே.முகமதலி உரையாற்றி ஆர்ப்பாட்டத்தைமுடித்து வைத்தார்.   திருவாரூர் மாவட்டத்தின் விவசாயிகள் சங்க ஒன்றிய செயலாளர்கள் பால் உற்பத்தியாளர் சங்க ஒன்றிய நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.