வணிக நம்பிக்கை குறியீட்டுள் 6வது இடத்தில் இந்தியா.  வணிகம் பலவினமாக உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

2014 ஆம் ஆண்டிலிருந்து முதல் காலாண்டில் இந்தியாவின் வணிகம் பலவினமாக உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 2017 ஆம் ஆண்டின் மூன்றாவது காலாண்டில், பலவீனமான நாணய மற்றும் எண்ணெய் விலை அதிகரிப்பு ஆகியவற்றால் வணிக நம்பிக்கை மிகவும் மோசமடைந்துள்ளது. இந்த 4 ஆண்டுகளின் வணிக உணர்வு மிகவும் வலுவற்ற நிலையில் உள்ளது. வணிக நம்பிக்கை குறியீட்டுள் உலகளவில் இந்தியா 89 புள்ளிகளுடன் 6வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது என சர்வதேச கிரண்ட் தோரந்தோன் வணிக அறிக்கை கூறுகிறது. இந்த ஆய்வில் இடம்பிடித்துள்ள முதல் ஐந்து நாடுகள் ஆஸ்திரியா, பின்லாந்து, இந்தோனேசியா, நெதர்லாந்து மற்றும் அமெரிக்கா ஆகும். 37 பொருளாதாரங்களின் 2,500 தொழில்துறையின் காலாண்டு உலகளாவிய வியாபார ஆய்வினை கொண்டு இந்த முடிவுகள் முடிவு செய்யப்பட்டுள்ளன.

உலக வங்கியின் வர்த்தக வியாபாரத்தை எளிதாக்கும் தரவரிசையில் இந்தியா முன்னேறினாலும் 1 அல்லது 2வது இடத்தை பெறமுடியவில்லை. திறமையான பணியாளர்களின் கிடைக்கும் தன்மை இருந்தும் இந்திய தொழில்களின் தேவையற்ற கட்டுப்பாடுகள், உள்கட்டமைப்பின் பற்றாக்குறை மற்றும் நிதியின் பற்றாக்குறை ஆகியவை மிகப்பெரிய வளர்ச்சிக்கான தடைகளாக மேற்கோள்காட்டப்பட்டுள்ளன என ஆய்வு தெரிவிக்கிறது.

Leave A Reply

%d bloggers like this: