கையடக்க போனிற்கு கணக்கில்லாத செயலிகள் நாளும் வந்து கொண்டிருக்கின்றன. இன்றைய நிலையில் கூகுள் பிளே ஸ்டோரில் மூன்று மில்லியன் செயலிகள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. ஒரே பயன்பாட்டிற்கு பல செயலிகள் இருந்தாலும் ஒவ்வொருவரின் தேவைக்கேற்ப தேர்வு செய்து பயன்படுத்தலாம். இந்த வாரம் பட்டியலிடப்பட்டுள்ள செயலிகளில் உங்களுக்கு பயனுள்ளதாகக் கருதுவதை மட்டும் கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து பதிவிறக்கி பயன்படுத்துங்கள்.

மேத்வே (Mathway)
அடிப்படைக் கணக்கு முதல் அல்ஜீப்ரா, டிரிக்னோமெட்ரி, லீனியர் அல்ஜீப்ரா, புள்ளியியல், வேதியியல் உள்ளிட்ட பல வகை கணக்கு முறைகளுக்கு தீர்வு காண இந்த செயலி உதவுகிறது. கால்குலேட்டர் போல தீர்வை மட்டும் தராமல் தீர்வு வந்த வழிகளையும் காட்டுவதால் மாணவர்களுக்கு பயனுள்ள செயலியாக இது இருக்கும்.இந்த செயலியை பதிவிறக்க: https://play.google.com/store/apps/details?id=com.bagatrix.mathway.android&hl=en_US

பிக் கொலாஜ் (Pic Collage)
போட்டோ எடிட்டிங் செய்ய உதவும் செயலி. பல படங்களை இணைத்து உருவாக்கும் கொலாஜ் எடிட்டிங் இதன் சிறப்பம்சமாகும். 100க்கும் மேற்பட்ட டெம்ப்ளேட்டாக கொடுக்கப்பட்டிருக்கும் கிரிட்களில் படங்களை சேர்த்து Collage படங்களை உருவாக்கலாம். ஸ்டிக்கர்களும் இதில் கிடைக்கிறது.இந்த செயலியை பதிவிறக்க: https://play.google.com/store/apps/details?id=com.cardinalblue.piccollage.google

எனி டூ (Any.do)
அன்றாட வேலைகளைத் திட்டமிட உதவும் செயலி இது. அலுவலகப் பணி, சொந்தப் பணி எதுவானாலும் குறித்து வைத்துக் கொண்டால் சரியான நேரத்திற்கு நினைவூட்டி வேலைகளைச் செய்ய உதவும். இந்த செயலியின் சிறப்பம்சம் எளிமையான வடிவமைப்புதான்.இந்த செயலியை பதிவிறக்க: https://play.google.com/store/apps/details?id=com.anydo

மை ஷேப்டி பின் (My Safetipin)
தனியாக புதிய இடங்களுக்கு பயணிப்பவர்கள் பாதுகாப்பாக இருக்க இந்த ஆப் உதவுகிறது. குறிப்பாக பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் பாதுகாப்பளிக்கக்கூடியது. இணையத் தொடர்புள்ள மொபைலில் இந்தச் செயலியை நிறுவிக் கொண்டு எடுத்துச் செல்லலாம். நீங்கள் செல்லும் இடங்கள், அங்குள்ள கூட்ட நெரிசல் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை வீட்டிலிருந்தே மற்றொரு போனில் கண்காணிக்கலாம். இந்த செயலியை பதிவிறக்க: https://play.google.com/store/apps/details?id=com.safetipin.mysafetipin

மணிஃபை (Monefy)
அன்றாட வரவு செலவுகளைத் திட்டமிட உதவும் செயலி இது. பில் கட்டணம், ரீச்சார்ஜ் செய்தது, டீ குடித்தது என்று எந்த செலவாக இருந்தாலும் செலவு செய்த தொகையை குறிப்பிட்டு வகையை மட்டும் தேர்வு செய்து பதிவு செய்து கணக்குப் பார்க்கலாம்.இந்த செயலியை பதிவிறக்க: https://play.google.com/store/apps/details?id=com.monefy.app.lite
மீண்டும் வலியுறுத்துகிறோம். இங்கு குறிப்பிட்டுள்ள ஆப்களில் உங்கள் தேவைக்கு உரியதை மட்டும் பயன்படுத்தவும். தேவையற்ற ஆப்களை பதிந்திருந்தால் அதனை நீக்கி விடுவது ஃபோனுக்கு மட்டுமல்ல நமக்கும் நல்லது.

Leave A Reply

%d bloggers like this: