அந்த ஊரில் நெடுஞ்சாலைக்கு நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கை நடந்து வரும் நேரம்….

அதில் நிலத்தை இழந்த மக்களுக்காக தகுந்த இழப்பீட்டுத்தொகை மாற்று இடம் போன்றவைகளுக்காக அலைந்து திரிந்து கொண்டிருந்த அந்த மனிதர்…

அவரிடம் ஒரு சக தோழர்…..

“தோழர் இந்த பிரச்சனைக்காக நீங்கள் மிகவும் சிரமப்படுகிறீர்களே தோழர்…?இதற்காக உங்கள் சொந்தப்பணம் எவ்வளவு செலவானது…?”

ஒரு சிறு புன்னகையோடு, “கணக்கு வைத்துக்கொள்ளவில்லை தோழர்…!” பதிலளித்து விட்டு அங்கிருந்து அகன்று செல்கிறார்…!

சிலநாட்களுக்குப் பிறகு சந்திக்கும் அதே தோழர்…

“தோழர் நீங்கள் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருங்கள்…அவர்கள் உங்களை குறி வைத்திருக்கிறார்கள்…”

“அட விடுங்க தோழர் அவனுங்களை எல்லாம் பார்த்து பயந்து என் சொந்த வீட்டை நானே சிறையாக மாற்றிக்கொண்டு, வீட்டிலேயே அடைந்து கிடக்க முடியுமா…?”

“இப்போது எங்கே சென்று கொண்டிருக்கிறீர்கள்..?’

“பக்கத்தில் உள்ள காலனியில் ஒருவரின் வீடு இடிந்து விழுந்து விட்டது. அதை சரி செய்ய வேண்டும்…அதற்காக தோழர்கள் எல்லோரும் அங்கே செல்கிறோம்…!”

தோழர். கண்ணிப்பொய்கை பாபு தான் அந்த மனிதநேயம் மிக்க மனிதர்…!

கேரள மாநிலம் கண்ணூரைச் சார்ந்த CPIM ஊழியர்…!

மாஹி நகர்மன்ற ( புதுச்சேரியுடன் இணைக்கப்பட்ட பகுதி) உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு செயல்பட்டவர்…!

சிறந்த மக்கள் பிரதிநிதி என்று எதிரிகளாலும் பாராட்டப்பட்டவர்…!

அவரை ஆர்.எஸ்.எஸ் மிருகங்கள் கழுத்தை வெட்டி கொடூரமாகக் கொலை செய்திருக்கிறார்கள்…

கண்ணூர் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக எந்த குழப்பமோ பிரச்சனையோ நடக்கவில்லை என்ற போதிலும் இந்த கொடூர கொலை சங்கிகளால் நடத்தப்பட்டுள்ளது…

கேரளத்தில் சமீபகாலமாக ஆர்.எஸ்.எஸ் அடைந்து வரும் பின்னடைவை சரிகட்ட பல்வேறு விதமான குழப்பங்களை உருவாக்கி அதன் மூலம் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள முயன்று வருகிறது…!

சுமார் 4000 சாகாக்கள் இருப்பதாகக் கூறிவந்த ஆர்.எஸ்.எஸ், தற்போது 950 சாகாக்களாக குறைந்துவிட்டது என்று தகவலினால் அதிர்ந்து போயுள்ளது…

மதவாதத்தைப் பயன்படுத்தி சாதாரண மக்களை இரு துருவங்களாக பிளவுபடுத்தி எதிரும் புதிருமாக நிறுத்தும் சூழ்ச்சி அரசியலை நடைமுறைப்படுத்த விடாமல், CPIM அதன் ஊழியர்களின் தீரமிக்க போராட்டத்தின் மூலம் தடுத்து வருகிறது….

தனது சூழ்ச்சி செல்லுபடியாகவில்லை என்று புரிந்து கொண்ட ஆர்.எஸ்.எஸ் எந்தக் காரணமும் இன்றி தோழர். பாபுவை படுகொலை செய்திருக்கிறார்கள்….!

ஏற்கனவே சிலகாலம் முன்பு…

தோழர். தன்ராஜ்…
தோழர். மோகனன்….

போன்ற மக்களால் மிகவும் நேசிக்கப்பட்ட CPIM ஊழியர்கள் சங்கிகளால் கொலை செய்யப்பட்டார்கள்…

அந்த வரிசையில் இப்போது தோழர்.பாபுவும்…

பாசிசத்திற்கு எதிரான போராட்டத்தில் உங்கள் இன்னுயிரையும் தந்து ஒரு வீரமிக்க போராளியாக நீங்கள் வீழ்ந்து போயிருக்கலாம்…

நீங்கள் உயர்த்திப்பிடித்த போராட்ட நெருப்பை அணையாமல் நாங்கள் முன்னெடுப்போம்…

உங்களுக்கு எங்கள் வீரவணக்கம்…!

லால் சலாம்…!

Sadan Thuckalai

#Fight_Against_Fascism
#BAN_RSS

Leave a Reply

You must be logged in to post a comment.