சேலம், மே-08.
துணை டவர் அமைக்கும் பணியை நிறுத்திட வலியுறுத்தி பிஎஸ்என்எல் அனைத்து ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளின் கூட்டமைப்பு சார்பில் தெருமுனை கூட்டம் செவ்வாயன்று புதிய பேருந்து நிலையம் முன் நடைபெற்றது.
              பிஎஸ்என்எல் நிறுவனத்தை தனியாருக்கு தாரைவார்க்கும் முயற்சியை கைவிட வேண்டும் துணை டவர் அமைக்கும் பணியை நிறுத்தவேண்டும் ஊழியர்களின் உயிர் முச்சாக இருக்க கூடிய செல்போன் கோபுரங்களை மட்டும் பிரித்து தனியாருக்கு விற்கும் மத்திய அரசை கண்டித்து சேலம் புதிய பேருந்து நிலையம் அருகில் ஊழியர்கள் தெருமுனை பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் மத்திய அரசை கண்டித்து  கோஷங்கள் எழுப்பினர் இதில் பிஎஸ்என்எல் எம் பிளாய்ஸ் ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் கோபால் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.