சேலம், மே – 08.
சேலத்தில் வாலிபர் சங்கத்தினர்  திரைப்பட இயக்குனர் மற்றும் தணிக்கை அலுவலர் ஆகியோருக்கு “டிஷீ காகிதம்”   பார்சல் அனுப்பும் நிகழ்ச்சி சேலம் பழைய பேருந்து நிலையம் தலைமை தபால் நிலையத்தில் செவ்வாயன்று நடைபெற்றது.

சமீபத்தில் வெளியான இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற திரைப்படம்…”அடல்ட் காமெடி” என்கிற முறையில் மிகவும் அருவருக்கதக்க வசனங்கள் காட்சிகள் அமைத்து உருவாக்கபட்டுள்ளது. இத்திரைப்படம் முழுவதும் பெண்கள் இளைஞர்களை இழிவுபடுத்தும் வகையில் சித்தரிக்கபட்டுள்ளது. இதைத்தொடர்ந்து அந்த திரைப்படத்தை இயக்கிய சந்தோஷ் பி.ஜெய்க்குமார், இதனை தணிக்கை செய்த தணிக்கை வாரியத்திற்கும் கண்டனம் தெரிவிக்கின்ற வகையில் “டிஷீ பேப்பர்” பார்சல் அனுப்பும் போராட்டம் வாலிபர் சங்கம்  சார்பில் நடைபெற்றது.இதில் மாவட்ட செயலாளர் என்.பிரவின்குமார், மாவட்ட பொருளாளர் வெங்கடேஷ், மாநகர வடக்கு நிர்வாகிகள் சசி, கற்பகம் உள்ளிட்டு பலர் பங்கேற்றனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.