திருப்பூர்,
திருப்பூரின் ஏற்றுமதி வர்த்தகம் கடந்தாண்டு 15 சதவிகிதம் வீழ்ச்சியடைந்துள்ளதாக ஏற்றுமதியாளர் சங்கத் தலைவர் சக்திவேல் தெரிவித்தார்.

திருப்பூரில் சர்வதேச கோடைகால பின்னலாடை கண்காட்சி நடைபெற உள்ளது. இதுதொடர்பான செய்தியாளர் சந்திப்பில் திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க கௌரவத் தலைவர் சக்திவேல் கூறியதாவது: 45வது கோடை கால ஆயத்த ஆடைகண்காட்சி, திருப்பூரை அடுத்துள்ள திருமுருகன் பூண்டி ஐ.கே.எப். வளாகத்தில் வரும் மே16 ஆம் தேதி 18ஆம் தேதி வரை 3 நாட்கள் நடைபெற உள்ளது. இதில் 30 அரங்குகளில், திருப்பூர், கோவை, கொல்கத்தா, டெல்லி, மும்பையைச் சேர்ந்த நிறுவனங்கள் கலந்து கொள்ளுகின்றன. இந்த அரங்குகளில் பருத்தி நூலிழை, செய்கை இழை, இறக்குமதி செய்யப்பட்ட துணிகளில் தயாரிக்கப்பட்ட புதுவகை ஆடை ரகங்கள் காட்சிப்படுத்த உள்ளன. மேலும் மூன்று நாள் கண்காட்சியை, அமெரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா, ஜப்பான், சிங்கப்பூர், கனடா உள்ளிட்ட உலகளாவிய நாடுகளைச் சேர்ந்த 50 இறக்குமதியாளர்கள், 120 வர்த்தக ஏஜென்சியினர் பார்வையிட வருவதை உறுதிசெய்துள்ளனர்.இந்த அரங்குகள்காலை 10 மணி முதல் மாலை 6 வரைபார்வையிடலாம் என்றார். மேலும், கடந்த 2017-18ம் நிதியாண்டில், திருப்பூரின் ஏற்றுமதி வர்த்தகம் 15 சதவிகித வீழ்ச்சி அடைந்துள்ளது. ரூ.26 ஆயிரம் கோடியாக இருந்த ஏற்றுமதி ரூ.23 ஆயிரம் கோடியாக குறைந்துள்ளது. கடந்த 6 மாதங்களில் ஆர்டர்கள் வெகுவாக குறைந்துவிட்டது.

இதுதொடர்ந்தால் ஏராளமான தொழிலாளர்கள் வேலை வாய்ப்பை இழக்கும் நிலை ஏற்படும். ஜி.எஸ்.டி.,ரீபண்ட் கிடைப்பதில் ஏற்படும் காலதாமதத்தால், நிறுவனங்களின் நிதி முடங்கியுள்ளது. 15 நாட்களுக்குள், ஜி.எஸ்.டி.,ரீபண்ட் வழங்க வேண்டும்.ஏற்றுமதி சலுகைகளை அதிகரித்து வழங்க வேண்டும். இவ்வாறு சக்திவேல் கூறினார். இந்தசந்திப்பின் போது ஆயத்த ஆடை வெளிநாட்டு வர்த்தக முகவர்கள் சங்க தலைவர் இளங்கோவன்,ஏ.இ.பி.சி., செயற்குழு உறுப்பினர்கள் சண்முகம், ராமு ஆகியோர் உடனிருந்தனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.