கோவை,
கோவை அன்னூரில் வாலிபர் சங்கத்தின் சார்பில் தொழிலாளர் தினம் எழுச்சியோடு கொண்டாடப்பட்டது.இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் அன்னூர் ஒன்றிய ஏஎம் காலனி கிளையின் சார்பில்உழைப்பவர் உரிமை தினமான மே தின விழா ஞாயிறன்று உற்சாகமாக கொண்டாடப்பட்டது. முன்னதாக, இவ்விழாவையொட்டி குழந்தைகளுக்கான ஓவியப்போட்டி, விளையாட்டு போட்டி, இளைஞர்களுக்கான கபடிப்போட்டி உள்ளிட்டவைகள் நடத்தப்பட்டது. இப்போட்டிகளில் நூற்றுக்கணக்கான குழந்தைகள் பங்கேற்றனர்.

இதனையடுத்து ஏஎம் காலனியில் பரிசளிப்பு விழா மற்றும் பொதுக்கூட்டம் கிளை செயலாளர் விக்னேஷ் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் வாலிபர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் கே.எஸ்.கனகராஜ், முன்னாள் மாவட்ட தலைவர் எஸ்.மணிகன்டன், அன்னூர் பேரூராட்சி முன்னாள் தலைவர் சவுந்திரராஜன், சிபிஎம் அன்னூர் ஒன்றிய செயலாளர் முகமதுமுசிர், தமுஎகச கிளை செயலாளர் சக்திவேல் ஆகியோர் போட்களில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளித்து கௌரவித்தனர். மேலும், இவ்விழாவின் ஒருபகுதியாக தொழிலாளர் தின கலைவிழா நடைபெற்றது. இதில் கோவை பிரியாவின் நடனம், பல்லடம் கலைக்குழுவின் தப்பாட்டம், அல்போன்சா கலைக்குழுவின் கலைநிகழ்ச்சி உள்ளிட்டவைகள் நடைபெற்றன. இந்நிகழ்வுகளில் வாலிபர் சங்கத்தின் அன்னூர் ஏஎம் காலனி கிளையின் நிர்வாகிகள் அப்பாஸ், விமல், அரவிந்த், சுல்தான் மற்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்று சிறப்பித்தனர்.

Leave A Reply

%d bloggers like this: