ஈரோடு,
வன்கொடுமை தடுப்பு சட்டத்தை சீர்குலைக்காதே என விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் பவானி தாலுகா மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தின் பவானி தாலுகாவின் 9 ஆவது மாநாடு பெரியமோளபாளையம் பகுதியில் ஞாயிறன்று நடைபெற்றது. இம்மாநாட்டிற்கு தாலுகா தலைவர் எஸ்.மாணிக்கம் தலைமை வகித்தார். மாநில துணைத்தலைவர் கே.துரைசாமி, மாவட்ட செயலாளர் ஆர்.விஜயராகவன், முன்னாள் மாவட்டத் தலைவர் கே.துரைராஜ், பவானி தொழிற்சங்க செயலாளர் எ.ஜெகநாதன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்கள். மாற்றுத் திறனாளிகள் சங்க மாவட்ட செயலாளர் வி.நடராஜன் வாழ்த்திப் பேசினார்.

இம்மாநட்டில் 100 நாள் வேலை திட்டத்தை முடக்கும் செயலை கைவிட்டு, பேரூராட்சி பகுதிகளிலும் வேலை வழங்க வேண்டும். வீடுகள் இல்லாத தொழிலாளர்களுக்கு இலவச வீட்டுமனை வழங்க வேண்டும். வன்கொடுமை தடுப்புச்சட்டத்தை சீர்குலைக்கும் நடவடிக்கைகளை கைவிட வேண்டும். தகுதியுள்ள அனைவருக்கும் முதியோர் உதவித்தொகை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. முன்னதாக, இம்மாநாட்டில் சங்கத்தின் பவானி தாலுகா தலைவராக டி.ரவீந்திரன், செயலாளராக எஸ்.மாணிக்கம், பொருளாளராக எஸ்.தம்பி உட்பட14 பேர் கொண்ட புதிய தாலுகா கமிட்டி தேர்வு செய்யப்பட்டது.

Leave a Reply

You must be logged in to post a comment.