கோவை,
பாக்கு விவசாயத்தை பாதுகாக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என விவசாய சங்கத்தினர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

இதுகுறித்து விவசாய சங்கத்தினர் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது, மேட்டுப்பாளையம், சிறுமுகை, பொள்ளாச்சி, உள்பட பல பகுதிகளில் பாக்கு மரங்கள் சுமார் 30 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ளது. தற்போது வறட்சி மற்றும் விலை வீழ்ச்சி காரணமாக, பாக்கு விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.மேலும், கோவை மாவட்டத்தில் 20 சதவிகிதமாக இருந்த பாக்கு உற்பத்தி தற்போது மூன்று சதவிகிதமாக குறைந்துள்ளது. சுமார் 25 ஆயிரம் பேர் இந்த பாக்கு விவசாயத்தை நம்பி இருந்த நிலையில் தற்போது 3 ஆயிரம் பேர் மட்டுமே ஈடுபட்டுள்ளனர்.

தமிழகத்தில் பாக்கு விற்பனை மையம் இல்லாததால் அண்டை மாநிலமான கேரளா மற்றும் கர்நாடகாவில் உள்ள கொள்முதல் நிலையத்திற்கு செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.வெகு தொலைவு செல்ல முடியாத காரணத்தால் இடை தரகர்களிடமே விற்று வருகிறோம். ஆகவே, தமிழக அரசு பாக்கு விவசாயத்தை மேம்படுத்தி, பாதுகாக்க வேண்டும். பாக்கு மரங்களில் இருந்து தயாரிக்கப்படும் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை பெருக்கவும், தமிழகத்தில் பாக்கு கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என மனுவில் வலியுறுத்தியுள்ளனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.