மன்னார்குடி: திருவாரூரில் துப்பாக்கி முனையில் ரூ.6 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக மாவட்ட எல்லையில் காவல்துறையினர் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் தமிழ்நாடு மெர்க்கண்டையில் வங்கி கிளை ஒன்று செயல்பட்டு வருகின்றது. இந்த வங்கியில் திங்களன்று திடீரென துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களுடன் உள்ளே நுழைந்த 5 பேர் கொண்ட கும்பல் வங்கி மேலாளர் கோவிந்தராஜை துப்பாக்கி முனையில் மிரட்டி ரூ. 6 லட்சம் ரொக்கம் மற்றும் 3 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் கொள்ளை சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் சிசிடிவி காட்சிகளை எடுத்து சென்றதால் காவல்துறையினர் கொள்ளையர்களை அடையாளம் காண்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன் உத்தரவின் பெயரில் மாவட்ட எல்லைகளில் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

Leave a Reply

You must be logged in to post a comment.