ஈரோடு,
சட்டத்திற்கு புறம்பான முறையில் நடத்தப்பட்ட சென்னிமலை கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

இதுதொடர்பாக ஈரோடு மாவட்டம், சென்னிமலை தாலுகா சிஎச்.28 ஜீவா கைத்தறி நெசவாளர் உற்பத்தி மற்றும் விற்பனை சங்க உறுப்பினர்கள் சார்பில் மாவட்ட ஆட்சியர் எஸ்.பிரபாகரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: மேற்குறிப்பிட்ட சங்கத்தில் போட்டியிடுவதற்காக தேர்தல் அதிகாரிகளிடம் வேட்பு மனு வழங்கியபோது, ஒப்புகை சீட்டு கொடுக்க மறுத்தனர். இதையடுத்து ஒப்புகை சீட்டு கொடுக்கும் வரை அலுவலகத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதை தொடர்ந்து அதிகாரிகள் ஒப்புகை சீட்டு வழங்கினர்.

இதன்பின்னர் கடந்த மே 2 ஆம் தேதி வேட்புமனு பரிசீலனைக்காக காத்திருக்கும்போது, தேர்தல் அதிகாரி மற்றும் மேலாளர் யாரும் வரவில்லை. பின்னர் மதியம் 2 மணியளவில் வந்த அதிகாரிகள் எந்த விளக்கமும் கேட்காமல், தன்னிச்சையாக சிலரது வேட்புமனுக்கள் மட்டும் ஏற்கப்பட்டதாக அறிவிப்பு பலகையில் ஒட்டிவிட்டு சென்றுவிட்டனர். இதில் உரிய விதிமுறைப்படி தாக்கல் செய்யப்பட்ட எங்களது மனுவை பரிசீலிக்கப்படாமலேயே நிராகரிக்கப்பட்டு இருந்தது.இது சட்ட விதிமுறைகளை மீறிய செயலாகும் என மாவட்ட தேர்தல் அதிகாரிகளிடம் முறையிட்டும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, சட்டத்திற்கு புறம்பான இந்த தேர்தலை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அம்மனுவில் கூறப்பட்டிருந்தது.

Leave A Reply

%d bloggers like this: