குவஹாட்தி :

பல்வேறு கால தாமதத்திற்கு பிறகு வரவிற்கும் அஸ்ஸாமின் தேசிய குடிமகன்களின் பதிவு இந்த மாத கடைசியில் வரவுள்ளது. இது அஸ்ஸாமின் 1985 அனுமதியின்படி, இந்திய குடிமகன் அல்லாதவர்களை கண்டறியும் நோக்கில் தயாரிக்கப்பட்டு வருகிறது.

அதன்படி, மார்ச் 24, 1971க்கு பிறகு இந்தியாவில் குடியேறியவர்கள் மற்றும் அவர்களின் வாரிசுகள் அனைவரும் குடிமகன் உரிமை பெற முடியாதவர்கள். மேலும், அவர்கள் முறைகேடாக குடியேறியவர்கள் என கருதப்படுகிறார்கள்.

தற்போது இதன் பட்டியல் வெளியிடப்படவுள்ள நிலையில் அஸ்ஸாமிலுள்ள பல மக்கள் இன்னும் அந்த பட்டியல்களில் இணைக்கப்படாமல் உள்ளனர். இதுதொடர்பாக இந்தியா மற்றும் வங்கதேசத்தின் இடையே முறையான உடன்படிக்கை எதுவும் இல்லாத நிலையில், இவர்களின் நிலை கவலைக்கிடமாகும் நிலை உருவாகி உள்ளது.

Leave A Reply

%d bloggers like this: