ஈரோடு,
தமிழக அரசின் ஊழியர் விரோதபோக்கை கண்டித்து மே 8 ஆம் தேதி சென்னை கோட்டையை முற்றுகை போராட்டம் அரசு ஊழியர் சங்கம் மாநிலத் தலைவர் மு.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளர்.

ஈரோடு மாவட்டம், கூடலிங்கம் திடல் அருகே தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் புதிய கட்டிட திறப்புவிழா நடைபெற்றது. இதில், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் ஈரோடு மாவட்டத் தலைவர் ஜெ.பாஸ்கர்பாபு தலைமை வகித்தார். மாநில தலைவர் மு.சுப்பிரமணியன் சங்கத்தின் கொடியினை ஏற்றி, புதிய சங்க கட்டிடத்தை திறந்து வைத்தார். மாநிலப் பொருளாளர் எம்.தங்கராஜ் கூட்ட அரங்கை திறந்து வைத்தார். மாவட்டச் செயலாளர் கே.வெங்கிடு வரவேற்றார். மாவட்ட பொருளாளர் வி.உஷாராணி, கட்டிடக்குழு தலைவர் சுந்தரலிங்கம், செயலாளர் எஸ்.சுகுமார் உட்பட திரளானோர் பங்கேற்றனர்.சங்கத்தின் மாநிலத் தலைவர் மு.சுப்பிரமணியன் கூறியதாவது:- ஆசிரியர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த செப்டம்பர் மாதம் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு அதில் வெற்றி பெற்றுள்ளோம். ஆனால், இந்த அரசு, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு புதிய பென்சன் திட்டம், ஊதிய முரண்பாடுகள், 21 மாத நிலுவைத் தொகை, சத்துணவு அங்கன்வாடி, ஊராட்சி செயலாளர், கிராம உதவியாளர்களுக்கான கோரிக்கைகளை இன்று வரை நிறைவேற்றவில்லை.

அதனால், மே 8 ஆம் தேதி சென்னை கோட்டையை முற்றுகையிட திட்டமிட்டுள்ளோம்.இதில் தமிழகம் முழுவதும் இருந்துலட்சக்கணக்கானவர்கள் பங்கேற்கிறார்கள். இந்த போராட்டத்தை தடை செய்வதற்காக எங்களது வாகனங்களை ஆர்.டி.ஒ. மூலமாக தடை செய்துள்ளது. முன்கூட்டியே கைது செய்வதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. எந்த தடையானாலும் அதை மீறி நாங்கள் முற்றுகையிடுவோம். அல்லது எங்களை அழைத்து பேசி எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். இது போன்ற நிகழ்வுகளுக்கு அரசு ஊழியர் சங்கம் எந்த வகையிலும் அச்சப்பட போவதில்லை. போராட்டத்தை கட்டாயமாக நடத்துவோம். இவ்வாறு அவர் கூறினார்.

Leave A Reply

%d bloggers like this: