ஈரோடு,
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மே தினத்தை முன்னிட்டு கோபி தாலுகா கொங்கர்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இதில், கிளைச் செயலாளர் கே.ஆர்.வேலுச்சாமி தலைமை வகித்தார். சிபிஎம் மாவட்டச் செயலாளர் ஆர்.ரகுராமன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம்.முனுசாமி, எஸ்.முத்துச்சாமி, தாலுகா செயலாளர் கெம்பராஜ், மாவட்டக்குழு உறுப்பினர்கள் கே.ஆர்.திருத்தணிகாசலம், வி.ஆர்.மாணிக்கம், நந்தகுமார் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். இப்பொதுக்கூட்டத்தில், குண்டேரி பள்ளத்திலிருந்து வெளியேறும் உபரி நீரை தடுத்து, பழத் தோட்டம், திட்டுப்புளிப்பாறை, அண்ணமார் கோவில் ஆகிய இடங்களில் தடுப்பணைகள் கட்டி தண்ணீரை தேக்க வேண்டும். ரேசன் கடைகளில் அனைவருக்கும் அனைத்து இடங்களிலும் தடையின்றி பொருள்கள் வழங்க வேண்டும். 100 நாள் வேலை கோரி பதிவு செய்யப்பட்டவர்களுக்கு வேலை மற்றும் சட்டப்படி கூலி வழங்க வேண்டும். கொங்கர்பாளையத்திலுள்ள உயர்நிலைப்பள்ளியை தரம் உயர்த்தி மேல்நிலைப் பள்ளியாக மாற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

Leave a Reply

You must be logged in to post a comment.