பொள்ளாச்சி,
பொள்ளாச்சி தாலுகாவில் மே 16 முதல் மே 31 ஆம் தேதி வரை ஜமாபந்தி நடைபெற உள்ளது. பொள்ளாச்சி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற இருக்கும் ஜமாபந்தி நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய் அலுவலர் தலைமை வகிக்கிறார். ஒவ்வொரு நாளும் காலை 10 மணி முதல் ஜமாபந்தி தொடங்குகிறது. முதல் நாளான மே 16 ஆம் தேதி ராமபட்டிணம் உள்வட்டமான புரவிபாளையம், சேர்வகாரண்பாளையம், வடக்கிபாளையம், தேவம்பாடிவலசு, மண்ணூர், ராமபட்டிணம், குமாரபாளையம், திம்மங்குத்து, நல்லூத்துக்குளி, அய்யம்பாளையம், முத்தூர், தாளக்கரை, போடிபளையம், ராசிசெட்டிபாளையம் உள்ளிட்ட கிராமங்களுக்கு ஜமாபந்தி நடக்கவுள்ளது.

மே 17 ஆம் தேதி பொள்ளாச்சி வடக்கு உள்வட்டத்தில் பூசநாயக்கன் தளி, குள்ளிசெட்டிபாளையம், சந்தேகவுண்டன்பாளையம், ஒக்கிலிபாளையம், சிக்கராயபுரம், காபுலிபாளையம், ஆர்.பொன்னாபுரம், குரும்பபாளையம், தொப்பம்பட்டி, கிட்டசூராம்பாளையம், வெள்ளாளபாளையம், அனுப்பர்பாளையம், ராசக்காபாளையம், புளியம்பட்டி, சங்கம்பாளையம், பொள்ளாச்சி நகரம், கோட்டாம்பட்டி கிராமங்களுக்கு நடக்க இருக்கிறது. மே 22 ஆம் தேதி பொள்ளாச்சி தெற்கு உள்வட்டமான ஜமீன் ஊத்துக்குளி, அம்பராம்பாளையம், சிங்காநல்லூர், நாயக்கன் பாளையம், சூளேஸ்வரன்பட்டி, கோட்டாம்பட்டி, வக்கம்பாளையம், சமத்தூர், எஸ்.பொன்னாபுரம், தொண்டாமுத்தூர், நல்லூர், வீரல்பட்டி, தளவாய்பாளையம், பழையூர், மாக்கினாம்பட்டி, சின்னாம்பாளையம், பழையூர், ஊஞ்சவேலாம்பட்டி, தென்குமாரபாளையம் உள்ளிட்ட கிராமங்களுக்கு நடைபெறுகிறது. மே 23 ஆம் தேதி பெரிய நெகமம் உள்வட்டமான கள்ளிப்பட்டி, பெரிய நெகமம்,சந்திராபுரம், சின்ன நெகமம், மூலனூர், கொண்டே கவுண்டன் பாளையம், ஆவலப்பம்பட்டி, அ.நாகூர், கொல்லப்பட்டி, போலிக்கவுண்டன் பாளையம், ஆவலப்பம்பட்டி, ஏரிப்பட்டி, திப்பம்பட்டி, பூசாரிப்பட்டி உள்ளிட்ட கிராமங்களுக்கு நடக்கவுள்ளது.

இதனைத்தொடர்ந்து மார்ச்சநாயக்கன்பாளையம் உள்வட்டமான ஆத்துப்பொள்ளாச்சி, மார்ச்சநாயக்கன் பாளையம், பெரிய போது, ஒடையக்குளம், உள்ளிட்ட கிராமங்களுக்கு மே.24 ஆம் தேதியும், ஆனைமலை உள்வட்டமான வே.புதூர், காளியாபுரம், ஆனைமலை, பெத்தநாயக்கனூர், சோமந்துரை சித்தூர், தென்சங்கம்பாளையம் பகுதிகளுக்கு வரும் மே 29 ஆம் தேதியும், கோட்டூர் உள்வட்ட கிராமங்களுக்கும், கோட்டூர் உள்வட்டத்திற்குட்பட்ட ஞகோட்டூர், அங்கலக்குறிச்சி, துரையூர், பில் சின்னாம்பாளையம், கரியாஞ்செட்டிபாளையம், கம்பாலபட்டி, ஜல்லிபட்டி ,அர்த்த நாரபாளையம் உள்ளிட்ட கிராமங்களுக்கு மே30 ஆம் தேதியும் ஜமாபந்தி நடக்கிறது. இறுதிநாளான மே 31 தேதி நாளில் கோலார்பட்டி உள்வட்டத்திற்குட்பட்ட கிராமங்களான நாட்டுக்கல்பாளையம் மற்றும் சோளபாளையம், நல்லாம்பள்ளி, சீலக்காம்பட்டி, எஸ்.மலையாண்டிபட்டணம், கோமங்கலம் புதூர், கூளநாயக்கன்பட்டி சிஞ்சுவாடி உள்ளிட்ட கிராமங்களுடன் மே 31 ஆம் தேதியுடன் ஜமாபந்தி நிகழ்வு முடிவடைகிறது. அந்ததந்த குறிப்பிட்ட உள்வட்டங்கள் அடங்கிய கிராமங்களில் வசிக்கின்ற பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகள் தொடர்பாக விண்ணப்பம் அளித்து பயன்பெறுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

%d bloggers like this: