கோவை,
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் 193 ஆவது இலக்கிய சந்திப்பு ஞாயிறன்று கோவையில் நடைபெற்றது.

கோவையில் தமுஎகச சார்பில் கதை, நாவல், கவிதை, கட்டுரைகள் போன்ற கலை இலக்கியங்கள் குறித்த மாதாந்திர இலக்கிய சந்திப்பு நடைபெற்று வருகிறது. இதன் தொடர்ச்சியாக ஞாயிறன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள தாமஸ் கிளப்பில் 193 ஆவது இலக்கிய சந்திப்பு நடைபெற்றது. கவிஞர் தென்றல் நிலா விஜய் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமுஎகசவின் மாநில கௌரவ தலைவர் பேராசிரியர் அருணன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று மார்க்ஸ் எனும் படைப்பாளி என்கிற தலைப்பில் கருத்துரையாற்றினார். காரல் மார்க்சின் எழுத்தில் பொதிந்திருக்கும் கலை இலக்கிய அழகியல் குறித்தும், மனித குல விடுதலைக்கு மார்க்சின் தேவை குறித்தும் உரையாற்றினார்.

இதனைத்தொடர்ந்து அருணனோடு கலந்துரையாடல் நடைபெற்றது. முன்னதாக, காலசித்தனின் ஒரு மிடறு பச்சை குறுதி கவிதை தொகுப்பு குறித்த அறிமுகவுரையை கவிஞர் மு.ஆனாந்தன் முன்வைத்தார். மறைந்த எழுத்தாளர் அர்ஷியா குறித்த நினைவலைகளை கவிஞர் இளஞ்சேரல் பகிர்ந்து கொண்டார். இதனையடுத்து இலக்கிய சந்திப்பில் பங்கேற்றோர் விருப்பப்பட்ட தலைப்பில் கவிதைகளை வாசித்தனர். இந்நிகழ்ச்சியில் தமுஎகச நிர்வாகிகள் தங்கமுருகேசன், தி.மணி, வெங்கடேசன் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

Leave A Reply

%d bloggers like this: