ஏற்காடு,
ஏற்காடு கோடை விழா மற்றும் மலர்காட்சிக்கான ஆயத்த பணிகள் குறித்து தங்கும் விடுதியினருடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

சேலம் மாவட்டம், ஏற்காட்டில் ஆண்டுதோறும் கோடைவிழா மற்றும் மலர்கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. இதனை காண தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை புரிவது வழக்கம். இந்தாண்டு 43 ஆவது ஆண்டு கோடை விழா மற்றும் மலர்கண்காட்சி வரும் மே 12 ஆம் தேதி முதல் மே 16 தேதி வரை நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.

இதன்ஒருபகுதியாக தங்கும் விடுதி உரிமையாளர்களுடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு சேலம் மாவட்ட திட்ட இயக்குனர் அருள்ஜோதி அரசு தலைமை வகித்து பேசுகையில், இந்த ஆண்டு பசுமை விழாவாக கெண்டாடப்படுவதால் அரசு சார்பில் ஒரு லட்சம் மரக்கன்றுகள் சுற்றுலா பயணிகளுக்கு வழங்கப்பட உள்ளது.அதனை அவர்கள் தங்கும் விடுதியில் சுற்றுலா பயணிகளுக்கு வழங்க வேண்டும். மேலும், ஏற்காடு டவுன் சுற்று வட்டார பகுதிகளில் 150 தண்ணீர் தொட்டிகள் வைக்கப்பட்டு தினந்தோறும் தண்ணீர் நிரப்பப்படும். இதேபோல் 8 நடமாடும் கழிப்பிடங்கள் நிறுவப்பட உள்ளதாக அவர் தெரிவித்தார்.

முன்னதாக, இக்கூட்டத்தில் பஞ்சாயத்து உதவி இயக்குனர் கோபிநாத், வட்டாட்சியர் சுமதி, வட்டார வளர்ச்சி அலுவலர் ராமசந்தர், காவல் ஆய்வாளர் ஆனந்தன் மற்றும் விடுதி உரிமையாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

%d bloggers like this: