மும்பை:
டி-20 போட்டிகளில் அதிக சிக்சர்கள் (301 சிக்சர்கள்) அடித்த முதல் இந்திய வீரர் என்ற சிறப்பு பெருமையை ரோகித் சர்மா பெற்றுள்ளார்.ரோகித் சர்மா சர்வதேச டி-20 போட்டிகளில் 78 சிக்சர்களும்,ஐபிஎல் தொடரில் 183 சிக்சர்களும்,சாம்பியன்ஸ் லீக்,சையது முஸ்தாக் அலி டிராபி உட்படப் பிற தொடர்களில் 40 சிக்சர்களையும் விளாசி மொத்தம் 301 சிக்சர்களை அடித்துள்ளார்.

டி-20 போட்டியில் அதிக சிக்சர்கள் அடித்தவர்கள் பட்டியலில் கிறிஸ் கெயில் (விண்டீஸ்) 844 சிக்சர்கள் அடித்து முதலிடத்தில் உள்ளார்.பொல்லார்டு (விண்டீஸ்) 525 சிக்சர்களுடன் இரண்டாமிடத்திலும்,மெக்கல்லம் (நியூசிலாந்து) 445 சிக்சர்களுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.ரோகித் சர்மா (இந்தியா) 301 சிக்சர்கள் அடித்து 7-வது இடத்தில் உள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: