தமிழக பல்கலைக்கழகங்கள், பொறியியல் கல்லூரிகளுக்கிடையே மண்டல அளவிலும் ஒட்டுமொத்த பிரிவிலும் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு விருதுகள் வழங்கும் விழா சென்னை பல்கலைக் கழகத்தில் நடைபெற்றது.

அனைத்து பிரிவுகளில் 710 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்த நாமக்கல் மாவட்டம், பாவை பொறியியல் கல்லூரி விளையாட்டு வீரர்களுக்கு அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் பேராசிரியர் மி.கி.சுரப்பா விருதுகள் மற்றும் பரிசுகளை வழங்கி பாராட்டினார். அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் முனைவர் எஸ். கணேசன், ஒருங்கிணைப்பாளர் குழு உறுப்பினர் முனைவர் டி.வி.கீதா விளையாட்டு வாரியத் தலைவர் முனைவர் எஸ்.செல்லதுரை ஆகியோர் உடனிருந்தனர்.

Leave A Reply

%d bloggers like this: