சென்னை:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு கோரிக்கையை ஏற்று, நீட் தேர்வு எழுத வரும் தமிழக மாணவர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய உத்தரவிட்ட கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு நன்றி தெரிவித்துள்ளது.

நீட் தேர்வு எழுத வரும் தமிழக மாணவர்களுக்கு தேவையான உதவிகளைச் செய்ய வேண்டுமென வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு சார்பில் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு வெள்ளியன்று (04.05.2018) கடிதம் எழுதியிருந்தார்.தோழர் கே. பாலகிருஷ்ணனின் கோரிக்கையை ஏற்று, “நீட் தேர்வு எழுதவரும் தமிழக மாணவர்களுக்கு உதவ முக்கிய பேருந்து நிலையங்கள், ரெயில் நிலையங்களில் உதவி மையங்களை அமைக்க மாவட்ட ஆட்சியர்கள், காவல் கண்காணிப்பாளர்களுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் உத்தரவிட்டு உள்ளார். தமிழக மாணவர்களுக்கு தேவையான போக்குவரத்து மற்றும் தங்கும் வசதிகளை ஏற்படுத்தவும் உத்தரவிட்டு உள்ளார்.”

தமிழக மாணவர்களுக்கு உதவிக்கரம் நீட்டிய கேரள முதல்வர் தோழர் பினராயி விஜயன் அவர்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு சார்பில் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கே.பாலகிருஷ்ணன் அறிக்கை ஒன்றில் கூறியுள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: