தமிழ்நாட்டில் ஞாயிறன்று (மே 6) மருத்துவப் படிப்புக்கான ‘நீட்’ நுழைவு தேர்வை எழுத 1 லட்சத்து 7 ஆயிரத்து 480 மாணவ,- மாணவிகளுக்கு தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

மருத்துவப் படிப்புக்கான ‘நீட்’ நுழைவு தேர்வை கடந்தாண்டு தமிழ்நாட்டில் 82 ஆயிரம் மாணவர்கள் எழுதினர். இந்தாண்டு தமிழகத்தில் நீட் தேர்வு எழுதும் மாணவ- மாணவிகள் எண்ணிக்கை கடந்த ஆண்டுடன் ஒப்பி
டுகையில் சுமார் 30 விழுக்காடு அதிகரித்துள்ளது.

அதாவது இந்தாண்டு தமிழகத்தில் சுமார் 1 லட்சத்து 10 ஆயிரம் மாணவ,-
மாணவிகள் நீட் தேர்வு எழுத விண்ணப்பித்தனர். இவர்களில் 1 லட்சத்து 7 ஆயிரத்து 480 மாணவ- மாணவிகளுக்கு தேர்வு எழுத மையங் கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

சென்னை, கோவை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், நாமக்கல், சேலம், திருச்சி, மதுரை, நெல்லை ஆகிய 10 நகரங்களில் நீட் தேர்வு மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு 149 மையங்களில் தேர்வு நடத்தப்பட்டன.
இந்த ஆண்டு கூடுதலாக 25 ஆயிரத்து 206 பேர் தேர்வு எழுதுவதால் கடந்த ஆண்டை விட கூடுதல் தேர்வு மையங்கள் அமைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அதன்படி இந்த ஆண்டு 170 தேர்வு மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

சென்னையில் அதிகபட்சமாக 33 ஆயிரத்து 842 பேர் நீட் தேர்வு எழுதுகின்றனர். இவர்களுக்காக எழுத 49 தேர்வு மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. கோவையில் 15 ஆயிரத்து 960 மாணவர்களுக்கு 32 மையங்கள், மதுரையில் 11 ஆயிரத்து 800 பேருக்கு 20 மையங்கள், நாமக்கல்லில் 5 ஆயிரத்து 560 பேருக்கு 7 மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

சேலத்தில் 17 ஆயிரத்து 461 மாணவர்களுக்கு 26 மையங்கள், திருச்சியில் 9 ஆயிரத்து 420 பேருக்கு 12 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. நெல்லையில் 4 ஆயிரத்து 383 பேருக்கு 10 மையங்கள், வேலூரில் 9 ஆயிரத்து
54 பேருக்கு 14 மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

இந்த தேர்வு மையங்களில் இடம் கிடைக்காத மாணவ,-மாணவிகளுக்கு தான் வெளி மாநிலங்களுக்கு செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு தேர்வு மையங்களின் எண்ணிக்கை 25 விழுக் காடு மட்டுமே அதிகரிக்கப்பட்டுள்ளன. எவ்வளவு தேவை என்பதைக் கூட கணக்கிட்டு மையங்கள் அதிகரிக்கப்படவில்லை.

Leave a Reply

You must be logged in to post a comment.