சிம்லா :

துப்புரவுத்தொழிலாளர்களின் கோரிக்கைகளை செவிமடுக்காமல் இருந்து வந்த இமாச்சல் பிரதேச பாஜக அரசை கண்டித்து துப்புரவுத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் தெருவெங்கும் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. குறிப்பாக கோடை  துவங்கி சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் நிலையிலும் கூட பாஜக அரசு துப்புரவுத் தொழிலாளர்களின் கோரிக்கையை ஏற்க மறுப்பதுடன் தொடர்ந்து வஞ்சித்து வருகிறது.

இந்நிலையில் இமாச்சல் பிரதேச உயர் நீதிமன்றம் துப்புரவு தொழிலாளர்கள் உடனே  பணிக்கு திரும்ப வேண்டும் என உத்தரவிட்டது. ஆனால் துப்புரவு தொழிலாளர்கள் எங்களை பணிக்கு திரும்ப சொல்லும் நீதிமன்றம் எங்களை வஞ்சிக்கும் இமாச்சல் பிரதேச அரசின் மீது ஏன் நடவடிக்கை எடுக்க மறுக்கிறது. நாங்கள் மட்டும் எப்போதும் வஞ்சிக்கப்பட வேண்டுமா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.   இதற்கிடையிலும் சிம்லா துப்புரவு தொழிலாளர்களின் வேலை நிறுத்த போராட்டம் மூன்று நாட்களாக தொடர்ந்து வருகிறது. இதனால் அங்காங்கு குப்பைகள் குவியத்துவங்கியிருக்கிறது.

இதற்கிடையில் போராடும் துப்புரவு தொழிலாளர்கள் மீது ஏன் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை என உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் கரோல் தலைமையிலான அமர்வு கேள்வி எழுப்பியுள்ளது. மேற்கொண்டு வேலை நிறுத்தத்தை தொடரும் ஊழியர்களை பணிநீக்கம் செய்யவும் நகராட்சிக்கு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் சமூக ஊடகங்களில் துப்புரவு தொழிலாளர்களை பணிநீக்கம் செய்து விட்டு அந்த இடத்திற்கு நீதிபதிகள் வேலைக்கு வருவார்களா என கேள்வி எழுப்பி விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.