நைரோபி:
கென்யாவில் கடந்த இரண்டு மாதங்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இந்த தொடர் மழையினால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் சிக்கி இதுவரை 112 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து கென்யாவின் செஞ்சிலுவை சங்க பொதுச் செயலாளர் அப்பாஸ் கெல்லட் கூறுகையில், நாடு முழுவதும் மார்ச் மாதம் தொடங்கி இதுவரை 112 பேர் மழை, வெள்ளத்தால் பலியாகி உள்ளனர். இதன் காரணமாக 48,117 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 2,60,200 பேர் இடம் பெயர்ந்துள்ளனர். 21 ஆயிரம் ஏக்கர் பரப்பளவிலான பயிர்கள் நாசமடைந்தன. 20 ஆயிரம் கால்நடைகள் இறந்துள்ளன என்றார்.

Leave A Reply

%d bloggers like this: