லண்டன்:
இந்திய கிரிக்கெட் அணி 3 டி-20, 3 ஒருநாள் மற்றும் 5 டெஸ்ட் போட்டிகளை கொண்ட தொடரில் பங்கேற்க இங்கிலாந்து நாட்டிற்குச் சுற்று பயணம் மேற்கோள்கிறது.இந்த தொடருக்கு தயாராகுவதற்காக இந்திய கேப்டன் விராட் கோலி இங்கிலாந்து நாட்டின் உள்ளூர் தொடரான கவுண்டி போட்டியில் விளையாடப் போவதாக அறிவித்தார்.கோலிக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் பச்சைக் கொடி காட்ட சர்ரே அணிக்கு ஒப்பந்தமாகியுள்ளார். விராட் கோலி கவுண்டி தொடரில் விளையாட முடிவெடுத்திருப்பது இந்திய அணிக்கு நல்ல பலனை தரும் என இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் கேரி கிறிஸ்டன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக கேரி கிறிஸ்டன் கூறியதாவது, “விராட் கோலி கவுண்டி தொடரில் விளையாட முடிவெடுத்திருப்பதை நான் வரவேற்கிறேன்.அங்குள்ள சீதோஷன நிலையை நன்கு அறிந்து கொள்ளவும்,இந்திய அணியை வெற்றியுடன் எளிதாக வழிநடத்தி செல்லவும் உதவியாக இருக்கும் என நினைக்கிறேன்.
விராட் கோலி கவுண்டி தொடரில் விளையாட உள்ளது அவருக்கு மட்டுமல்ல இந்திய அணிக்கும்நல்ல பலனைத் தரும்”எனத் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

You must be logged in to post a comment.