விஜயவாடா:
ஆந்திர மாநிலத்தின் கந்திக்கோட்டா கோட்டையையும் குத்தகைக்கு எடுப்பதற்கு, டால்மியா பாரத் லிமிடெட் நிறுவனம், சுற்றுலாத்துறை அமைச்சகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.‘மொனுமெண்ட் மித்ராஸ்’ திட்டத்தின் கீழ் இந்தியாவிலுள்ள 95 நினைவுச் சின்னங்களை மோடி அரசு குத்தகைக்கு விட முடிவு செய்துள்ளது. இதுவரை 31 நிறுவனங்களுக்கு குத்தகை எடுப்பதற்கான உரிமம் வழங்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே செங்கோட்டையை குத்தகைக்கு விட்ட மோடி அரசு, தற்போது, ஆந்திர மாநிலம் கடப்பா அருகே இருக்கும்- 14-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ‘கந்திக்கோட்டா’ கோட்டையையும் டால்மியா நிறுவனத்திற்கு குத்தகைக்கு விட்டுள்ளது.தற்போது இந்தக் கோட்டையை ஐந்தாண்டுகளுக்கு குத்தகைக்கு எடுத்துள்ள டால்மியா நிறுவனம் இதன் பராமரிப்புக்கு ஆண்டுக்கு ரூ. 5 கோடி வரையில் செலவிடப் போவதாக கூறியுள்ளது.

Leave A Reply

%d bloggers like this: