கன்சாஸ்:
அமெரிக்காவின் கன்சாஸ் மாகாணத்தின் ஓலாதே பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் மென்பொறியாளராக பணியாற்றிய ஸ்ரீநிவாஸ் குச்சிபோட்லா (32) கடந்த 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம், அதே பகுதியில் உள்ள ஆஸ்டின் மதுபான விடுதியில் அமர்ந்தபடி, கான்சால் பல்கலைக்கழக அணி விளையாடிய கூடைப்பந்தாட்ட போட்டியை தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருந்தனர்.மும்முரமான ஆட்டத்தின் போது அங்கே இருந்த ஒருவன், திடீரென தனது கைத்துப்பாக்கியால் அருகில் இருந்த இந்தியர்களை நோக்கி சரமாரியாக சுட்டான். உடனே நாட்டை விட்டு வெளியேறுங்கள் என்று கூவியபடி அவன் நடத்திய வெறித்தனமான தாக்குதலில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் ஸ்ரீநிவாஸ்.

இந்திய மென்பொறியாளர் ஸ்ரீநிவாஸ் குச்சிபோட்லாவை சுட்டுக் கொன்றது அமெரிக்கா கடற்படையில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஆடம் புரிண்டோன் (52) என தெரிய வந்தது. இதையடுத்து, ஆடம் புரிண்டோனை அமெரிக்க போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு அங்குள்ள நீதிமன்றத்தில் நடைபெற்றது. விசாரணை முடிவில், ஆடம் புரிண்டோனுக்கு ஆயுள் தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Leave A Reply

%d bloggers like this: