ஈரோடு,
100 நாள் வேலை திட்டத்தில் உள்ள குறைபாடுகளை களைந்திடக்கோரி கொடுமுடியில் வட்டார வளர்ச்சி அலுவலர் அலுவலகம் முன்பு இரண்டாவது நாளாக
விவசாயத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நிறுத்தி வைக்கப்பட்ட 100 நாள் வேலையை திட்டத்தை மீண்டும் வழங்க வேண்டும். மூன்று மாதத்திற்கு மேலாக உள்ள சம்பள பாக்கிகளை உடனே வழங்க வேண்டும். வேலை நாட்களை 200 நாட்களாகவும், ரூ.400 கூலி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் கொடுமுடி வட்டார வளர்ச்சி அலுவலர் அலுவலகம் முன்பு வியாழனன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்நிலையில் இரண்டாவது நாளாக வெள்ளியன்றும் விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் கொடுமுடி காவல் துறை ஆய்வாளர் மணிகண்டன் மற்றும் வட்டார வளர்ச்சிஅலுவலர் சாந்தி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் அடுத்த 15 நாட்களுக்குள் வேலை வழங்குவதாக எழுத்துப்பூர்வமாக உறுதியளித்தனர். இதனையடுத்து போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.

முன்னதாக, இப்போராட்டத்திற்கு விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தின் கொடுமுடி ஒன்றிய செயலாளர் கே.பி.கனகவேல் தலைமை வகித்தார். மாநிலநிர்வாகி கே.சண்முகவள்ளி கோரிக்கைகளை விளக்கி பேசினர். இதில் திரளானோர் கலந்து கொண்டர்.

Leave A Reply

%d bloggers like this: