ஈரோடு,
ஈரோட்டில் வீட்டில் இருந்தவர்களை கட்டிப்போட்டு பணம் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு சென்னிமலை ஓடைக்காட்டு வலசு பகுதியில் வசித்து வருபவர் தங்காயம்மாள் (63). இவரது மகன் கோபாலகிருஷ்ணன் (41). கடந்த வியாழனன்று மாலை வீட்டின் கதவை தட்டும் சத்தம் கேட்டு கோபாலகிருஷ்ணன் கதவை திறந்துள்ளனர். அப்போது முகமூடி அணிந்த 6 பேர் இருவரையும் தாக்கி கட்டிப்போட்டுள்ளனர். இதன்பின் பீரோவில் இருந்த ரூ.15 ஆயிரம் ரொக்கம், 7 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இந்த கொள்ளை சம்பவம் குறித்து அரசலூர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Leave A Reply

%d bloggers like this: