கோவை,
கோவையில் பெண் காவலர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்வம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டத்தை சேர்ந்தவர் பிரியா (29). தற்போது ரயில்வே காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருகிறார். இவரது கணவர் நவநீதகிருஷ்ணன். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக தம்பதியினர் இருவரும் கடந்த சில வருடங்களாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இவர்களது குழந்தைகளை பிரியாவின் தாயார் கவுண்டம்பாளையத்தில் உள்ள அவர்களது வீட்டில் வைத்து பராமரித்து வருகிறார். பணியின் காரணமாக கோவை அவிநாசி சாலையில் உள்ள காவல்துறை குடியிருப்பில் பிரியா தனியாக வசித்து வருகிறார்.

இந்நிலையில் வெள்ளியன்று இரவு பணி முடித்து வீடு திரும்பிய பிரியா தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனை கண்ட அருகில் வசிப்பவர்கள் உடனடியாக ரேஸ்கோர்ஸ் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் பிரியாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

%d bloggers like this: