உடுமலை,
உடுமலை மடத்துக்குளம் அருகேயுள்ள சாமிநாதபுரத்தை சேர்ந்தவர் கோதண்டராமன்.இவர் மனைவி வசந்தி.இவர்களுக்கு சுதர்சன் (9), ரோகித் (7) இரண்டு மகன்கள் உள்ளனர். இவர்கள் திருவிழாவிற்கு சென்ற இடத்தில் பண்னை குட்டையில் மூழ்கி பலியாகினர்.இச்சம்பவத்தால் சிறுவர்களின் தாய் வசந்தி தற்கொலை செய்து கொண்டார்.

பள்ளி விடுமுறையை கழிக்கவும்,திருவிழாவில் கலந்து கொள்ள தாந்தோணியில் உள்ள பெற்றோர்கள் வசிக்கும் ஊருக்கு வசந்தி தன் இரு மகன்களையும் அனுப்பி வைத்தார். இந்நிலையில், தாத்தாவின் தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்த இருவரை காணவில்லை. அதிர்ச்சியடைந்த தாத்தாவும்,பாட்டியும் அக்கம் பக்கத்தில் தேடிப்பார்த்தனர். பின்பு சந்தேகத்தில் பண்ணை குட்டையில் பார்த்தனர். அப்போது குட்டையின் ஒரு பகுதியில் பிணமாக கிடந்தனர். இரு உடல்களை பொதுமக்கள் வெளியே எடுத்தனர்.

சிறுவர்கள் இறந்த தகவல் கிடைத்ததும் உடுமலை காவல்துறையினர் இருவர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக உடுமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்நிலையில், குழந்தைகள் இறந்த சோகத்திலிருந்த வசந்தி வெள்ளியன்று அதிகாலை மண்ணெண்யை உடலில் ஊற்றி தீக்குளித்தார்.இவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வந்து அவரை மீட்டு உடுமலை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் . ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்தில் இறந்தார். 2 குழந்தைகள் இறந்த சம்பவம் மற்றும் தாய் தீக்குளித்து தற்கொலை செய்தது தாந்தோணி கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave A Reply

%d bloggers like this: