திருப்பூர்,
திருப்பூரில் வியாழனன்று பெய்த மழையில் சாய தண்ணீரை நெய்யல் ஆற்றில் திறந்து விடப்பட்டதால் பனி போல நுரை மிதந்து வருகின்றது.

திருப்பூரின் ஜீவ நதியாக விளங்கி வந்த நொய்யல் ஆறு ,தற்போது சாக்கடை கழிவுகள் செல்லும் பெரிய கால்வாயாக மட்டுமே உள்ளது. இந்த நதியில் மழைக்காலங்களில் மட்டுமே தண்ணீரானது செல்கிறது மற்ற நேரங்களில் சாய தண்ணீர் செல்லக்கூடிய நிலையிலேயே இருக்கின்றது .திருப்பூரின் சாய ஆலைகளில் அதிக அளவில் செலவு பிடிக்கும் ஜிரோ டிஸ்சார்ஜ் எனப்படும் முறையில் கழிவு நீரை சுத்திகரித்தால் சாய அதிபர்களின் லாபம் குறையும் என்பதால் இது போன்று மழை நேரங்களில் நொய்யல் நதியில் செல்லும் நீரில் தங்கள் சாய ஆலை கழிவுகளை வெளியேற்றி நிம்மதி அடைந்து கொள்கின்றனர்.சாய ஆலை கழிவுகளை வெளியேற்ற கூடாது என நீதிமன்றங்கள் தீர்ப்பளித்தும் தொடரந்து , சாய ஆலைகள் வெளியேற்றும் சாய கழிவுகளால் இந்த நதியில் செல்லும் நீரை நம்பியிருந்த சில விவசாயிகள் விவசாயத்தை கைவிட்டு வேறு தொழில்களுக்கு மாறிவிட்டனர்.

தொடர்ந்து சாய கழிவுகளை நொய்யல் நதியில் விட்டதால் இந்த நதியில் உள்ள ஒரத்துப்பாளையம் அணை மக்கள் பயன்படுத்த முடியாத நஞ்சு மிகுந்த கழிவுகள் கொண்ட அணையாக மாறியுள்ளதுடன் இந்த அணையை சுற்றிலும் உள்ள விவசாய நிலங்களும் மலட்டு தன்மை அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. மாசு கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் இது போன்று நெய்யல் ஆற்றில் சாயக்கழிவு நீர் மற்றும் நுரைகள் வருவதை தடுக்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கையாகஉள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.