சென்னை:
தமிழகத்திலேயே நீட் தேர்வு மையங்களை அமைக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தலைமையில் சென்னை அண்ணாநகரில் உள்ள சிபிஎஸ்இ அலுவலகத்தை வெள்ளியன்று (மே 4) முற்றுகையிட்ட அனைவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் ஏ.ஆறுமுக நயினார், தென் சென்னை மாவட்ட செயலாளர் ஏ.பாக்கியம், மாநிலக் குழு உறுப்பினர் ஆர்.வேல்முருகன், மாவட்ட செயற்குழு உறுப்பி
னர்கள் ஜி.செல்வா, வடசென்னை மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் என்.ராமகிருஷ்ணன், இரா.முரளி, இந்திய மாணவர் சங்கத்தின் தலைவர்கள், மாணவர்கள் உள்ளிட்ட ஏராள
மானோர் கலந்து கொண்டனர். அனைவரையும் காவல் துறையினர் கைது செய்தனர்.

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய கே.பாலகிருஷ்ணன் கூறியதாவது:
வருகிற 7ஆம் தேதி நாடு முழுவதும் நீட் தேர்வு நடைபெறவுள் ளது. ஏற்கனவே தமிழ்நாட்டிற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரி தொடர்ந்து போராடினோம். ஆனால் மத்திய அரசு நம்பிக்கையை ஏற்படுத்தி கடைசி நேரத்தில் நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க முடியாது எனக் கூறிவிட்டது. அதனால் கடந்த ஆண்டே நீட் தேர்வு நடைபெற்றது.

அதன்பிறகும் அனைத்துக் கட்சிகளும் போராட்டம் நடத்தின. ஆனால் மத்திய அரசு இந்தக் கோரிக்கையை பரிசீலிக்கவே இல்லை. இந்தச் சூழ்நிலையில் தமிழ்நாட்டு மாணவர்கள்
நீட் தேர்வு எழுதி அதில் அவர்கள் வெற்றிபெறக் கூடாது என்ற நோக் கத்தில் மத்திய அரசும், சிபிஎஸ்இ நிர்வாகமும் செயல்படுகிறது. இதுகுறித்து தமிழக முதல்வரைத் தொடர்பு கொண்டு மாணவர்களுக்கு இலவச போக்குவரத்து, தங்கும் வசதியைச் செய்து கொடுக்க வேண்டும் என்று பேசியுள்ளோம். அதேபோல் கேரள முதல்வரைத் தொடர்பு கொண்டு தமிழகத்தில் இருந்து தேர்வு எழுத வரும் மாணவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்ய வேண்டும் எனக் கோரிக்கை வைத்தோம். முதலமைச்சர் பினராயி விஜயன் உடனடியாக அங்குள்ள உதவி செயலாளரிடம் தேவையான ஏற்பாடுகளைச் செய்யுமாறு அறிவுறுத்தினார்.

உதவிச் செயலாளர் உடனடியாக இங்கே நம்மைத் தொடர்பு கொண்டு எவ்வளவு மாண
வர்கள் வருகிறார்கள். எந்தெந்த மையத்திற்கு எவ்வளவு மாணவர்கள் என்ற விவரத்தைக் கேட்டார்கள். அதற்காக இங்குள்ள மத்திய இளநிலை கல்விக்கழக மண்டல அலுவலகத்திற்கு வந்து அதிகாரிகளிடம் விவரத்தைக் கேட்டால், இதற்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை. இந்தத் தேர்வை நீட் விங் தனியாக நடத்துகிறது எனக் கூறுகிறார். அப்படியென் றால் இங்கே எதற்கு இந்த அலுவலகம் என்று கேட்டால், பள்ளிகளை மேற்பார்வையிடுவதற்கு மட்டும்தான் எனக்
கூறுகிறார்கள்.

பிறகு 5,375 மாணவர்கள் வெளிமாநிலத்திற்குச் சென்று தேர்வு எழுத உள்ளதாகத் தெரிவித்தனர். சரி எந்தெந்த தேர்வு மையத்திற்கு எவ்வளவு பேர் செல்கிறார்கள் என்ற விவரத்தைக் கொடுங்கள் நாங்கள் கேரள அரசிடம் தெரிவித்து உதவி செய்யுங் கள் எனக் கோருகிறோம் என்றால், அதற்கும் அதிகாரி எங்களால் அதைக் கூற முடியாது, தில்லியில் இருந்து
தான் வாங்கி அனுப்ப வேண்டும் என்கிறார்.

நாங்கள் உரிய விவரம் கிடைக்கும் வரை இந்த அலுவலகத்தை விட்டுச் செல்லமாட்டோம். மேலும் அரசு அறிவித்துள்ள ஆயிரம் ரூபாய் என்பது போதுமானதல்ல. ஒரு மாணவன் ஆயிரம் ரூபாயை வைத்துக் கொண்டு ராஜஸ்தான் சென்று வர முடியுமா? எனவே மாநில அரசு அவர்களுக்குத் தேவையான போக்குவரத்து, தங்கும் வசதி உள்ளிட்ட அனைத்தையும் ஏற் பாடு செய்து தர வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

You must be logged in to post a comment.