தேனி:                                                                                                                                                                                    எந்தவொரு பிரச்சனையின் மீது போராட எந்தக் கட்சிக்கும் உரிமை உண்டு .காவிரி
பிரச்சனையில் எதிர்க்கட்சிகள் இணைந்து போராடிக் கொண்டிருக்கிற சூழ்நிலையில், வைகோ , நியூட்ரினோ ஆய்வு மையத்தை எதிர்த்து நடைபயணம் மேற்கொண்டார். நடைபயண துவக்க விழாவிற்கு மார்க்சிஸ்ட் கட்சியை அழைத்தார் .வர இயலாது என்பதை எழுத்துப்பூர்வமாக அவருக்கு தெரிவித்தோம். ஆனால் பொது வெளியில் மார்க்சிஸ்ட் கட்சி மீது வைகோ விமர்சனம் செய்தார் . வைகோ நடத்திய நடைபயணத்தை எதிர்க்கவில்லை.திட்டத்தை பொறுத்த வரையில் மார்க்சிஸ்ட் கட்சிக்கு பல்வேறு ஐயங்கள் இருக்கிறது. சுற்றுப்புறச் சூழலுக்கு எந்தவித பாதிப்பு ஏற்படும் , ஆய்வுக் கூடம் அமைப்பதால் முல்லைப்பெரியாறுக்கு எந்த வகையில் பாதிப்பு ஏற்படும் என்பது உள்ளிட்ட பல கேள்விகள் உள்ளன .இதற்கு திட்டத்தை அறிவித்துள்ள மத்திய அரசு முதலில் விளக்கம் சொல்ல வேண்டும் .திட்டம் குறித்து மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்கு இருக்கிறது .

அது தொழிற்சாலை அல்ல . ஆய்வுக்கூடம் தான் .இந்த ஆய்வுக் கூடத்தால் மக்களுக்கு ஆபத்து என்று சொன்னால் எதிர்த்துப் போராடும் முதல் கட்சியாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இருக்கும். எனவே மத்திய அரசு இதுகுறித்து ஏன் வாய் திறக்கவில்லை .மத்திய அரசும் ,அறிவியல் துறையும் தெளிவுபடுத்த வேண்டும் .அவ்வாறு விளக்கம் அளிக்கப்பட்டு தெளிவுபடுத்தவில்லை என்றால், விளக்கம் போதுமானதாக இல்லையென்றாலும் உங்களோடு சேர்ந்து போராடவும் தயார் . விளக்கம் அளிக்கப்படாத நிலையில் போராடுவது சரியல்ல என்பதை தெரிவித்தோம் .

கருத்தொற்றுமை உள்ள பிரச்சனைகளில் இணைந்து செயல்படுவோம் .கருத்தொற்றுமை இல்லாத பிரச்சனைகளில் தனித்து செயல்படுவதுதானே முறை .மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்துகிற எல்லா போராட்டங்களிலும் வைகோவால் கலந்து கொள்ள முடியுமா ?அந்தந்த கட்சிகளுக்கு தனித்தனி கொள்கை இருக்கிறது . பண மதிப்புநீக்க நடவடிக்கையை தமிழகத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் திமுக ,விடுதலை சிறுத்தைகள் , காங்கிரஸ் உள்ளிட்ட பெரும்பான்மையான கட்சிகள் எதிர்த்த போது வைகோ மட்டும் வாழ்த்துச் சொல்லி வரவேற்றார் .இது குறித்து வைகோவை நாங்கள் பொது மேடையில் விமர்சனம் செய்ததில்லை .அதற்கு குறைபட்டுக்கொள்ளவில்லை . எனவே எந்த கட்சிக்கும் மார்க்சிஸ்ட் கட்சி கடமைப்பட்டது இல்லை . நாங்கள் எங்களுக்கு மட்டுமே கடமைப்பட்டவர்கள்.

முல்லைப்பெரியாறு
முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் 152 அடி வரை நீரை தேக்க வேண்டும் என தெளிவான நிலைப்பாட்டை கொண்டுள்ளோம் .152 அடி நீர் தேக்க வேண்டும் என கேரள அரசை வற்புறுத்துகிறோம் . உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி 152 அடி நீர் தேக்க தமிழக ,கேரள அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் .உச்சநீதிமன்ற தீர்ப்பை எல்லோரும் மதித்து நடக்க வேண்டும் என கேரளாவை சேர்ந்த எல்லா எதிர்க்கட்சிகளையும் கேட்டுக்கொள்கிறோம்.

Leave a Reply

You must be logged in to post a comment.