சென்னை:
13-வது சப் ஜூனியர் மாநில எறிப்பந்து சாம்பியன்ஷிப் போட்டிகள் சென்னை அம்பத்தூரில் உள்ள சேது பாஸ்கரா மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்றது. 20 மாவட்டங்களைச் சேர்ந்த வீரர்,வீராங்கனைகள் பங்கேற்ற இந்தத் தொடரில், ஆண்கள் பிரிவில் திருச்சி அணியும்,பெண்கள் பிரிவில் திருவள்ளூர் அணியும் முதலிடத்தைப் பிடித்து 15 ஆயிரம் ரூபாய் ரொக்க பரிசை தட்டிச் சென்றன. ஆண்கள் பிரிவில் சென்னை அணி இரண்டாவது இடத்தையும்,காஞ்சிபுரம் அணி மூன்றாவது இடத்தையும் பிடித்தன. பெண்கள் பிரிவில் திருச்சி அணி இரண்டாவது இடத்தையும், காஞ்சிபுரம் அணி மூன்றாது அணி இரண்டாவது இடத்தையும் பிடித்தன.

ஆண்கள் பிரிவில் சிறந்த வீரராக விருதுநகரைச் சேர்ந்த இளங்கேஷ்வரனும், பெண்கள் பிரிவில் சிறந்த வீராங்கனையாக திருப்பூரைச் சேர்ந்த சிந்தியாவும் தேர்வு செய்யப்பட்டனர்.
மாநில அளவில் வெற்றி பெற்ற திருச்சி, திருவள்ளூர் அணிகள் மத்தியபிரதேச மாநிலம் போபாலில் நடக்கும் தேசிய போட்டிக்கான பயிற்சி முகாமில் தமிழ்நாடு சார்பில் பங்கேற்கின்றன.

Leave a Reply

You must be logged in to post a comment.