மலப்புரம்:
மலப்புறம் பிரஸ் கிளப்பில் புகுந்த ஆர்எஸ்எஸ் வன்முறை கும்பல் சந்திரிகா நாளிதழின் புகைப்பட செய்தியாளர் பகத்தை தாக்கி காயப்படுத்தியுள்ளது.

ஆர்எஸ்எஸ் நடத்திய போராட்டத்தின்போது பயணிகளை அவர்கள் தாக்கிய புகைப்படத்தை சந்திரிகா நாளிதழில் பகத் பிரசுரம் செய்ததாக கூறி அவர்கள் இந்த தாக்குதலில் ஈடுபட்டனர். அவரது செல்போனையும் கைப்பற்றி நாசப்படுத்தினர். காயமடைந்த பகத் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மலப்புரம் பிரஸ் கிளப்பில் புகுந்து செய்தியாளரைத் தாக்கிய வன்முறையாளர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கவும், குற்றவாளிகள் சட்டத்தின் முன்பு நிறுத்தப்படவும் வேண்டும் என கேயுடபிள்யுஜே மாநில தலைவர் கமால் வரதூர், பொதுச்செயலாளர் சி.நாராயணன் ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர்.

மார்ச் 3 உலக பத்திரிகையாளர் சுதந்திர தினமாக கடைப்பிடிக்கும் நிலையில் செய்தியாளர் மீது ஆர்எஸ்எஸ் அமைப்பினர் நடத்தியுள்ள தாக்குதலுக்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Leave A Reply

%d bloggers like this: