மூனிச்:
ஐரோப்பிய கண்டத்தில் உள்ள பெரும்பாலான நாடுகள் கால்பந்து கிளப் லீக் தொடர்கள் நடத்தப்படுவது வழக்கம்.இந்த கிளப் தொடர்களில் கலக்கும் முன்னணி அணிகளுக்காக சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடர் ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது.

நடப்பாண்டு சாம்பியன்ஸ் லீக் தொடரில் ரியல் மாட்ரிட்,ரோமா,பேயர்ன் மூனிச், லிவர்பூல் ஆகிய அணிகள் அரையிறுதிக்குத் தகுதி பெற்றன.பொதுவாக சாம்பியன்ஸ் லீக் தொடரில் அரையிறுதி ஆட்டங்கள் இரண்டு லெக்காக நடத்தப்டுகின்றன. கடந்த மாத இறுதியில் நடைபெற்ற முதல் லெக் ஆட்டங்களில் ரியல் மாட்ரிட் அணி 2-1 என்ற கோல் கணக்கில் பேயர்ன் மூனிச்சை வீழ்த்தியது.லிவர்பூல் அணி 5-2 என்ற கோல் கணக்கில் ரோமாவை வீழ்த்தியது.

செவ்வாயன்று நடைபெற்ற 2-வது லெக்கின் முதல் ஆட்டத்தில் ரியல் மாட்ரிட் அணி பேயர்ன் மூனிச்சை எதிர்கொண்டது.பரபரப்பான நடைபெற்ற இந்த ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.இரண்டு லெக்கின் மொத்த கோல் அடிப்படையில் 4-3 என்ற கோல் கணக்கில் ரியல் மாட்ரிட் அணி 3-வது முறையாக இறுதிக்கு முன்னேறியது.புதனன்று நடைபெற்ற 2-வது லெக்கில் ரோமா – லிவர்பூல் அணிகள் மோதின.துவக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய லிவர்பூல் அணி 4-2 என்ற கோல் கணக்கில் ரோமா அணியை எளிதாக வீழ்த்தியது.

இரண்டு லெக் ஆட்டங்களைச் சேர்த்து லிவர்பூல் அணி 9-4 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறியது.ரியல் மாட்ரிட்- லிவர்பூல் அணிகள் மோதும் இறுதி போட்டி உக்ரைன் தலைநகர் கீவ்வில் மே மாதம் 27-ஆம் தேதி நடைபெறுகிறது.

Leave A Reply

%d bloggers like this: