கிங்ஸ்டன்:
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் விண்டீஸ் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ரான்ஸ்போர்டு பந்து வீச்சில் சந்தேகம் இருப்பதாகக் கூறி,போட்டி நடுவர் சர்வதேச கிரிக்கெட் வாரியத்திடம் (ஐசிசி) புகார் அளித்தார்.

ரான்ஸ்போர்டு பந்து வீச்சைப் பரிசோதனைக்கு உட்படுத்தி மூன்று மாதத்திற்குள் சரிசெய்து கொள்ள வேண்டும் என விண்டீஸ் கிரிக்கெட் வாரியத்திற்கு ஐசிசி அறிக்கை அனுப்பியது.ஆனால் ரான்ஸ்போர்டு இதுவரை தனது பந்து வீச்சை ஆய்வுக்கு உட்படுத்தவில்லை.

இதனால் கடுப்பான ஐசிசி சர்வதேச போட்டியில் பந்து வீச ரான்ஸ்போர்டுக்கு தடைவிதித்துள்ளது.ரான்ஸ்போர்டு உள்நாட்டுத் தொடரில் மட்டுமே விளையாடமுடியும்.வெளிநாட்டில் நடைபெறும் லீக் தொடர்களில் பங்கேற்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

You must be logged in to post a comment.